Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

அதிபர்களிடமும், ஆசிரியர்களிடமும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

T

The Leader Desk

ஏப்ரல் 6, 2023 • 10:30 AM

அதிபர்களிடமும், ஆசிரியர்களிடமும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாட்டிக்காகவும் சேவையாற்ற வேண்டும் என மாகாண கல்விப்பணிப்பாளர் அமரசிறி பியதாச ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
  • அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மத்திய மாகாணத்தில் நகர்புற பாடசாலைகளில் பலர் 10 வருடத்திற்கும் மேலாக கடமையாற்றுகின்றனர்.
  • இன்னும் சிலர் மேலதிகமாக உள்ளனர்.
  • குறித்த நடமாடும் சேவை இன்று காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 வரை அதிபர் ஆசிரியர்களின் சேவை மற்றும் கல்வி அபிவிருத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

நாட்டிக்காகவும் சேவையாற்ற வேண்டும் என மாகாண கல்விப்பணிப்பாளர் அமரசிறி பியதாச ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

மத்திய மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் ஹட்டன் கல்வி வலயம் இணைந்து அபியச எனும் தொனிப்பொருளில் நடமாடும் சேவை ஒன்று (06) திகதி ஹட்டன் ஸ்ரீபாத சிங்கள மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்திருந்தது இந்த நிகழ்வில் ஒழுங்கு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மத்திய மாகாணத்தில் நகர்புற பாடசாலைகளில் பலர் 10 வருடத்திற்கும் மேலாக கடமையாற்றுகின்றனர்.

இன்னும் சிலர் மேலதிகமாக உள்ளனர். ஆகவே இடமாற்ற சபைகள் ஊடாக அவர்களை அப்பாடசாலையிலிருந்து எடுத்து ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்ற பாசாலைகளுக்கு வழங்க உள்ளதாகவும், அதிக கஸ்ட பாடசாலைகளில் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு நகர் பாடசாலைகளில் சேவையாற்ற சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் கடந்த வருடம் வீழ்ச்சி கண்ட ஹட்டன் கல்வி வலயத்தினையும் மத்திய மாகாணத்தில் பின்னடைந்த ஏனைய வலயங்களையும் கல்வி முன்னேற்றம் காண்பதற்கு விசேட திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும், அதன் ஒரு அங்கமாக அபியச என்ற நடமாடும் சேவையினை இன்று நடத்தி வருவதாகவும், மாணவர்களை இனங்கண்டு அவர்கள் சிறந்த பெறுபேறுகளையும் பண்மிக்க கல்வியினை பெற்றுகொள்வதற்கு சில்பாலோக்க எட்லஸ் போன்ற கல்வித்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.

ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் பி.ஸ்ரீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையின் மூலம் இடம் மாற்றம் அபிவிருத்தி, திட்டமிடல், ஒழுக்காற்று நடவடிக்கைகள், சேவை நிரந்தரமாக்கல், விடுமுறை, ஆசிரியர் விடுவிப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட 16 விடயங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கு இன்றைய தினம் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளன.

மூன்றாவது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த நடமாடும் சேவையில் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தினை சேர்ந்த உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஹட்டன் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,அலுவலக உத்தியோகத்தர்கள் , அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த நடமாடும் சேவை இன்று காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 வரை அதிபர் ஆசிரியர்களின் சேவை மற்றும் கல்வி அபிவிருத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அதிபர்களிடமும், ஆசிரியர்களிடமும் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை! | Tamil Leader | We Lead the Nation