Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

எரிவாயு சிலிண்டரின் விலை குறித்து பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

T

The Leader Desk

ஏப்ரல் 6, 2023 • 10:28 AM

எரிவாயு சிலிண்டரின் விலை குறித்து பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அத்துடன் மாவட்டத்தில் என்ன விலை உள்ளது என்பதைப் பார்க்க விலைப்பட்டியலைப் பார்வையிடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதுடன் குறித்த நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மேலதிகமாக பணத்தினை கொடுக்க வேண்டாம் என நுகர்வோர் அதிகார சபை கேட்டுள்ளது.
  • இதன் படி லிட்ரோ சமையல் எரிவாயு புதிய விலை கடந்த செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்த நிலையில் புதிய விலைகள் பின்வருமாறு அறிவித்துள்ளது.
  • கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 3738 ரூபா) 05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 402 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 1502 ரூபா) 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 183 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 700 ரூபா) ஆகும்.
  • இதே வேளை மற்றுமொரு நிறுவனமான லாஃப்ஸ் தனது எரிவாயு விலை குறைப்பினை அறிவித்துள்ளது.
எழுத்து அளவு:

வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன் மாவட்டத்தில் என்ன விலை உள்ளது என்பதைப் பார்க்க விலைப்பட்டியலைப் பார்வையிடுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதுடன் குறித்த நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மேலதிகமாக பணத்தினை கொடுக்க வேண்டாம் என நுகர்வோர் அதிகார சபை கேட்டுள்ளது.

இதன் படி லிட்ரோ சமையல் எரிவாயு புதிய விலை கடந்த செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் விலையை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்த நிலையில் புதிய விலைகள் பின்வருமாறு அறிவித்துள்ளது.

  1. 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1005 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 3738 ரூபா) 05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 402 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 1502 ரூபா) 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 183 ரூபாவால் குறைப்பு (புதிய விலை 700 ரூபா) ஆகும்.



அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை பின்வருமாறு

  1. 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை- 4,050 /-


05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை - 1,690/-

  1. 3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை - 852/-




லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் விலைச்சூத்திரத்திற்கு ஏற்ப இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளதாக அதன் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதே வேளை மற்றுமொரு நிறுவனமான லாஃப்ஸ் தனது எரிவாயு விலை குறைப்பினை அறிவித்துள்ளது.

இதன்படி லாஃப்ஸ் கேஸ் தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை கடந்த செவ்வாய்க்கிழமை (04) நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளதுடன் அதன்படி 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ எடையுள்ள லாஃப்ஸ் வீட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் ஏப்ரல் புதன்கிழமை 5ஆம் திகதி முதல் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.5280 ல் இருந்து ரூ.3990 ஆகவும் எரிவாயு விலையை ரூ.1290 ஆகவும் குறைத்துள்ளது. 5 கிலோ எரிவாயு சிலிண்டர் ரூ.2112 ல் இருந்து ரூ.1596 க்கு ரூ.516 குறைக்கப்பட்டு வாடிக்கையாளருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.

சந்தை எரிவாயு விலை மற்றும் ரூபாயின் ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச விலைச் சலுகைகளை வழங்க தமது நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாகவும் மாவட்டங்களுக்கு ஏற்ப விலை மாற்றங்கள் பற்றிய கூடுதல் விவரங்களை அறிய லாஃப்ஸ் எரிவாயு வாடிக்கையாளர் சேவை எண் 1345 ஐ அழைத்து பொதுமக்கள் தெளிவினை பெற முடியும் என குறிப்பிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...