அமுல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் களப்பரிசோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இக்களப் பரிசோதனையில் மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி என்.ஏ.வட்டபொல, வருமான பரிசோதகர்களான ஏ.ஜே.சமீம், எம்.சலீம், எம்.எஸ்.எம்.உபைத், பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.ஏ.அஹத் உள்ளிடோர் பங்கேற்றுள்ளனர்.
கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் இயங்கி வருகின்ற அனைத்து இறைச்சிக் கடைகளிலும் அதிரடியாக இப்பரிசோதன மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது கட்டுப்பாட்டு விலை உரிய முறையில் நடைமுறைப் படுத்தப்படுகிறதா என்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாத இறைச்சிக் கடைகளில் அவ்விலைப்பட்டியலானது மாநகர சபை உத்தியோகத்தர்களினால் ஒட்டி விடப்பட்டுள்ளன. அத்துடன் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தத் தவறிய வியாபாரிகளுக்கு எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கல்முனை மாநகர சபை எல்லையினுள் ஒரு கிலோ கிராம் தனி இறைச்சியை 2,000 ரூபாவுக்கும் 200 கிராம் முள் சேர்க்கப்பட்ட ஒரு கிலோ கிராம் இறைச்சியை 1,800 ரூபாவுக்கும் விற்பனை செய்வதென மாநகர ஆணையாளர் தலைமையில் இறைச்சிக் கடைக்காரர்களின் பங்கேற்புடன் திங்கட்கிழமை (03) இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாட்டிறைச்சி விலை குறித்து களப்பரிசோதனை!
T
The Leader Desk
ஏப்ரல் 5, 2023 • 2:06 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அமுல்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் களப்பரிசோதனை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
- கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் இயங்கி வருகின்ற அனைத்து இறைச்சிக் கடைகளிலும் அதிரடியாக இப்பரிசோதன மேற்கொள்ளப்பட்டது.
- இக்களப் பரிசோதனையில் மாநகர சபையின் கால்நடை வைத்திய அதிகாரி என்.ஏ.வட்டபொல, வருமான பரிசோதகர்களான ஏ.ஜே.சமீம், எம்.சலீம், எம்.எஸ்.எம்.உபைத், பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.ஏ.அஹத் உள்ளிடோர் பங்கேற்றுள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

