Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

சஜித்தை பழிவாங்குவதாக நினைத்து வடக்கு கிழக்கு மக்களை பழிவாங்கும் அரசாங்கம்!

T

The Leader Desk

ஏப்ரல் 5, 2023 • 9:25 AM

சஜித்தை பழிவாங்குவதாக நினைத்து வடக்கு கிழக்கு மக்களை பழிவாங்கும் அரசாங்கம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கம் பழிவாங்குகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இரா.
  • பாராளுமன்றத்தில் நேற்று (04) கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  • சஜித் பிரேமதாஸவினை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு இந்த வீடு திட்டங்களை முடிக்காமல் இருப்பதன் ஊடாக உண்மையிலேயே வடக்கு கிழக்கிலே வாழும் மக்களை தான் நீங்கள் பழிவாங்குகின்றீர்கள்.
  • ஏனென்றால் உங்களுக்கு தெரியும் 2020 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் எத்தனையோ அமைச்சர்களிடம் இந்த கேள்விகளை நாங்கள் கேட்கும்போது கூட ஒவ்வொரு அமைச்சரும் இதை நாங்கள் முடித்து தருவோம் நிதி கிடைத்தால் முடித்தருவோம் என கூறுகின்றோம்.
எழுத்து அளவு:

அரசாங்கம் பழிவாங்குகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (04) கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையாற்றிய அவர், ‘உண்மையிலேயே இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்ல எங்களுடைய வடக்குக் கிழக்கிலே இருக்கும் அனைத்து மாவட்டங்களிலுமே நல்லாட்சி காலப்பகுதியிலே அந்த நேரத்திலே வீடமைப்பு அதிகார சபைக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் சஜித் பிரேமதாஸ பல வீடு திட்டங்களை இந்த வடக்குக் கிழக்கிலே வந்து ஆரம்பித்திருந்தார்.

உண்மையிலேயே இந்த நல்லாட்சி அரசாங்கமானது மாறிவிட்டதுக்கு பிறகு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழே சஜித் பிரேமதாஸவின் அமைச்சின் கீழே வழங்கப்பட்ட வீடுகள் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக இந்த வீட்டுத்திட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாஸவினை பழிவாங்குவதாக நினைத்துக்கொண்டு இந்த வீடு திட்டங்களை முடிக்காமல் இருப்பதன் ஊடாக உண்மையிலேயே வடக்கு கிழக்கிலே வாழும் மக்களை தான் நீங்கள் பழிவாங்குகின்றீர்கள்.

ஏனென்றால் உங்களுக்கு தெரியும் 2020 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக வந்ததன் பின்னர் எத்தனையோ அமைச்சர்களிடம் இந்த கேள்விகளை நாங்கள் கேட்கும்போது கூட ஒவ்வொரு அமைச்சரும் இதை நாங்கள் முடித்து தருவோம் நிதி கிடைத்தால் முடித்தருவோம் என கூறுகின்றோம்.

நிதியை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தினுடைய பொறுப்பு. வீடமைப்பு அதிகார சபைக்குரிய நிதி கிடைக்கும் பட்சத்தில் ஆறு மாதத்திற்குள் நாங்கள் முடிப்போம் என்று சொல்வதானது நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பதில்.

இந்த வீடுகள் லிண்டர் மட்டத்திற்கு கட்டினால் 5 லட்சம் ரூபாய், கூரை போட்டால் 10 இலட்சம் ரூபாய் என கூறியமைக்காரணமாக பல மக்கள் இன்று கடனாளியாக மாறி இருக்கிறார்கள்.

இந்த வீடு தொடர்பான விடயங்களை சார்ந்த கௌரவ அமைச்சரிடம் முன்வைக்கும் ஒரு வேண்டுகோள் நீங்கள் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வரும் போது தயவு செய்து நீங்கள் மட்டக்களப்பில் இருக்கும் ஆளும் கட்சியை சேர்ந்த சிவநேசதுரை சந்திரகாந்தன், வியாழேந்திரன் ஆகியோரை மட்டும் நீங்கள் கூப்பிட்டு பேசாமல், நீங்கள் எதிர்க்கட்சியிலே இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து பேச வேண்டும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...