வேண்டும் என தமிழ் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
சனிக்கிழமை (01) சங்கானை பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்மாதம் பாராளுமன்றத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த பயங்கரவாத சட்டம் பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் என்ற பெயருடன் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கடந்த காலங்களில் பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த நிலையில் தற்போது தெற்கில் வாழும் மக்களும் குறித்த சட்டத்தினால் அடக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த வருடம் பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்க வேண்டும் எனக் கோரி பருத்தித்துறை முனையில் இருந்து தெய்வேந்திர முனைவரை பேரணியாக நாம் சென்றோம்.
எமது பேரணி இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களையும் ஊடறுத்துச் சென்ற நிலையில் எந்த ஒரு பகுதியிலும் எமது பேரணிக்கு எதிர்ப்புக்கள் எழவில்லை.
இந்த நாட்டினுடைய மக்கள் பெரும்பாலானவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள நிலையில்
தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறோம் என கூறி ஆபத்தான புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிறைவேற்றுவதற்கு முனைகிறது.
குறித்த சட்டமூலத்தை ஏப்ரல் மாத நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன அண்மையில் அறிவித்துள்ள நிலையில் குறித்த சட்டமூலத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தோற்கடிக்க வேண்டும்.
அதற்கான அழுத்தங்களை வழங்குவதற்கு இன மத மொழிகளுக்கு அப்பால் சென்று மக்கள் பேரழிச்சியுடன் போராட்டங்கள் இடம்பெற வேண்டும்.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டால் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஊடக நிறுவனங்கள்
தொழிற்சங்கங்கள் சுயாதீன அமைப்புக்கள் என அரசாங்கத்துக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.
தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச் சட்டம் வரையறை இல்லாத நிலையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில்
அரசாங்கத்தை பாதுகாப்பதற்கு ஜனநாயக வழியில் போராடுபவர்களை கட்டுப்பாடுத்துவதற்கான வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நீதி அமைச்சர் குறித்த சட்டமூலத்தை தெளிவு படுத்துவதற்கு நீதிமன்றம் செல்வோம் என்கிறார் நீதிமன்றம் அரசியல் அமைப்பு உட்பட்டே வியாக்கியானங்களை முன்வைக்கும்.
நாங்கள் குறித்த சட்டமூலத்தை தோற்படிப்பதற்கு சிங்கள புத்திஜீவிகள் தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து பாரி ஒரு போராட்டத்தை நடத்தவுள்ளோம்
ஆகவே, ஆபத்துக்கள் நிறைந்த புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை தோற்கடிப்பதற்கு இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களும் பேர் எழுச்சியாக வீதியில் இறங்கினால் தோற்கடிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடிப்போம்!
T
The Leader Desk
ஏப்ரல் 3, 2023 • 6:12 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வேண்டும் என தமிழ் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.
- சனிக்கிழமை (01) சங்கானை பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற அரசுக்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
- எமது பேரணி இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களையும் ஊடறுத்துச் சென்ற நிலையில் எந்த ஒரு பகுதியிலும் எமது பேரணிக்கு எதிர்ப்புக்கள் எழவில்லை.
- இந்த நாட்டினுடைய மக்கள் பெரும்பாலானவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ள நிலையில் தற்போதைய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகிறோம் என கூறி ஆபத்தான புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தினை நிறைவேற்றுவதற்கு முனைகிறது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

