Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் சலுகைகள்

T

The Leader Desk

ஏப்ரல் 2, 2023 • 11:13 PM

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலங்கை அரசாங்கத்தின் சலுகைகள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மக்கள் எப்போதும் தங்கள் நாட்டைப் பற்றி சிந்தித்து சரியான முடிவுகளை எடுப்பார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
  • புலம்பெயர்ந்த இலங்கையர்கள் தங்கள் நாட்டைப் பற்றி நினைக்கும் போது அவர்களுக்குப் பெருமை சேர வேண்டும்.
  • ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

மக்கள் எப்போதும் தங்கள் நாட்டைப் பற்றி சிந்தித்து சரியான முடிவுகளை எடுப்பார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முதலில் நாம் எமது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும், ஏனெனில் அவர்கள் நாட்டை வேண்டுமென்றே சிரமங்களுக்குள்ளாக்குவதற்காக செய்யப்பட்ட வெறும் அரசியல் பேச்சுகளுக்கு செவிசாய்க்காமல் நாட்டின் அவசரத் தேவையை உணர்ந்தார்கள்.

இலங்கைக்கு பணம் அனுப்பியுள்ளனர்

எனவே,அவர்கள் இலங்கைக்கு பணம் அனுப்பியுள்ளனர். உண்மையில் இதற்குக் காரணம் நமது அசாத்திய திறமையல்ல.

புலம்பெயர்ந்த இலங்கையர்கள் தங்கள் நாட்டைப் பற்றி நினைக்கும் போது அவர்களுக்குப் பெருமை சேர வேண்டும். நாங்கள் அவர்களிடம் பணத்தை அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தோம், அவர்கள் அதை ஏற்றுக் கொண்டனர்.

அரசாங்கம் என்ற வகையில் அவர்களுக்கு சில சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுத்தோம். எப்படியோ, நாட்டின் சார்பாக அவர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றினார்கள்.

மக்கள் மனதில் பல்வேறு அரசியல் சித்தாந்தங்களை புகுத்த சில பிரிவினர் முயற்சித்தாலும், மக்களை மாற்றும் சக்தி அவர்களிடம் இல்லை என்பது மிகவும் வெளிப்படையானது. மக்கள் எப்போதும் தங்கள் நாட்டைப் பற்றி சிந்தித்து சரியான முடிவுகளை எடுப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...