Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

பணத்திற்காக சுயமரியாதையை தாரைவார்க்க மாட்டார்கள்

T

The Leader Desk

ஏப்ரல் 1, 2023 • 11:30 AM

பணத்திற்காக சுயமரியாதையை தாரைவார்க்க மாட்டார்கள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவ்வாறு இணைத்துக் கொள்வதற்கு பணமாக கருப்புப் பணமும்,பண்டோரா பத்திர பணமுமே பயன்படுத்தப்படுவதாகவும், இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
  • இதுமட்டுமின்றி அரசியலமைப்பை மீறி தேர்தலை சீர்குலைத்து வருவதாகவும்,அதையும் தாண்டி,புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வந்து தொழிற்சங்க தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்களையும் சாதாரண மக்களையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த முயற்சிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
  • தெஹிவளையில் நேற்று (31) மாலை இடம்பெற்ற வட்டார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:

செய்திகளை உருவாக்கி நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை பிளவுபடுத்தும் சதித்திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார் எனவும், எதிர்க்கட்சியின் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் 2000 இலட்சம் வழங்கி பணத்துக்கேனும் தம் பக்கம் பெறுவதற்கு பேரம் பேசும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கு பணமில்லாத இந்த அரசாங்கம், அரசாங்கத்தின் பக்கம் இணைத்துக்கொள்வதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பணம் கொடுத்து முயற்சித்தாலும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் பணமில்லாமல் எதிர்க்கட்சியுடன் இணைய தயாராக உள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் பணத்திற்காக தமது சுயமரியாதையை தாரைவார்க்க மாட்டார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டு 6 மாத கால வயதான ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 54 ஆசனங்களை வழங்கி தேர்தல் வரலாற்றில் சாதனை படைக்க இந்நாட்டு மக்கள் உதவினார்கள் எனவும், எனவே 2000 இலட்சம் அல்லது அதற்கு மேல் கொடுத்தாலும், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சலுகைகளுக்காகவோ வரப்பிரசாதங்களுக்காகவோ தங்கள் சுயமரியாதையை இழக்க மாட்டார்கள் எனவும், மக்களுக்கு ஒருபோதும் துரோகம் இழைக்கமாட்டார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2000 இலட்சம் அல்ல 50000 கோடியேனும் இரைத்து முடிந்தால் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவரை தன் பக்கம் இணைத்துக்கொள்ளுங்கள் பார்ப்போம் என தான் அரசாங்கத்திற்கு சவால் விடுப்பதாகவும், இவ்வாறு மக்களுக்கு துரோகம் இழைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறு இணைத்துக் கொள்வதற்கு பணமாக கருப்புப் பணமும்,பண்டோரா பத்திர பணமுமே பயன்படுத்தப்படுவதாகவும், இது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த அரசாங்கம் சகல பக்கத்தாலும் மக்களை துரத்தித் துரத்தி தாக்கி வருவதாகவும், மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதன் மூலமும், வரிகளை அதிகரிப்பதன் மூலமும், வட்டி வீதத்தை அதிகரிப்பதன் மூலமும் மக்கள் நசுக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி அரசியலமைப்பை மீறி தேர்தலை சீர்குலைத்து வருவதாகவும்,அதையும் தாண்டி,புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வந்து தொழிற்சங்க தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்களையும் சாதாரண மக்களையும் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்த முயற்சிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

தெஹிவளையில் நேற்று (31) மாலை இடம்பெற்ற வட்டார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...