Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

அமைச்சர் கஞ்சன பொலிஸ் மா அதிபரிடம் விடுத்துள்ள கோரிக்கை

T

The Leader Desk

மார்ச் 31, 2023 • 11:21 PM

அமைச்சர் கஞ்சன பொலிஸ் மா அதிபரிடம் விடுத்துள்ள கோரிக்கை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் உரிய விசாரணை நடத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
  • இந்நிலையில், நாட்டின் பொருளாதாரம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • இவ்வாறான பாதுகாப்பற்ற நிலை மீண்டும் ஏற்படாத வகையில் அனைத்து எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோக வலயங்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறும் அமைச்சர் தனது கோரிக்கை கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் உரிய விசாரணை நடத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான பாதுகாப்பற்ற நிலை மீண்டும் ஏற்படாத வகையில் அனைத்து எரிபொருள் சேமிப்பு மற்றும் விநியோக வலயங்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறும் அமைச்சர் தனது கோரிக்கை கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவ பெற்றோலிய முனையத்திற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த தொழிற்சங்க பிரதிநிதிகள், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பான வலயத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்து, அத்தியாவசிய சேவையாக குறிப்பிடப்பட்டுள்ள எரிபொருள் விநியோகத்தை முடக்கியதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், நாட்டின் பொருளாதாரம் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ள நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அன்றைய தினம் நிறுவனத்திற்கும், விநியோகஸ்தர்களுக்கும் ஏற்பட்ட நஷ்டத்தை கணக்கிட்டு, குறித்த சம்பவத்திற்கு தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...