Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஐபிஎல் முதல் வெற்றி யாருக்கு தெரியுமா?

T

The Leader Desk

மார்ச் 31, 2023 • 11:21 PM

ஐபிஎல் முதல் வெற்றி யாருக்கு தெரியுமா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதின.
  • மறுமுனையில் மொயீன் அலி 23 ஓட்டங்கள், பென் ஸ்டோக்ஸ் 7 ஓட்டங்கள், அம்பதி ராயுடு 12 ஓட்டங்கள் சேர்த்தனர்.
  • தொடர்ந்து குஜராத் பந்துவீச்சை சிதறடித்த கெய்க்வாட் 92 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
  • அப்போது அணியின் ஓட்டம் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ஆக இருந்தது.
எழுத்து அளவு:



தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் மோதின.

நாணய சுழற்சியை வென்ற குஜராத் அணி தலைவர் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

தொடக்க வீரர்களாக தேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினர். தேவன் கான்வே ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி ஓட்ட குவிப்பில் ஈடுபட்டார்.

23 பந்துகளில் அரை சதம் கடந்தார். மறுமுனையில் மொயீன் அலி 23 ஓட்டங்கள், பென் ஸ்டோக்ஸ் 7 ஓட்டங்கள், அம்பதி ராயுடு 12 ஓட்டங்கள் சேர்த்தனர்.

தொடர்ந்து குஜராத் பந்துவீச்சை சிதறடித்த கெய்க்வாட் 92 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஓட்டம் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ஆக இருந்தது.

அதன் பின்னர் ரவீந்திர ஜடேஜா ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். ஷிவம் துபே 19 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அதன்பின் தலைவர் டோனியுடன் சான்ட்னர் இணைய, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 178 ஓட்டங்கள் குவித்தது. கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய டோனி 7 பந்துகளில் 14 ஓட்டங்கள் எடுத்தார்.

குஜராத் தரப்பில் முகமது ஷமி, ரஷித் கான், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். ஜோஸ் லிட்டில் ஒரு விக்கெட் எடுத்தார்.

இதை அடுத்து 179 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது.

குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவர்கள் நிறைவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை பெற்று ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16 வது சீசன் இன் முதல் வெற்றியை பதிவு செய்தது.

குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் சுப்மன் கில் 63 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் சென்னை சூப்பர் கிஙஸ் சார்பில் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 3 விக்கெட்டுக்களை பெற்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...