Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெற சுறுசுறுப்பு அவசியம்

T

The Leader Desk

மார்ச் 31, 2023 • 4:07 PM

நோய்களில் இருந்து பாதுகாப்புப் பெற சுறுசுறுப்பு அவசியம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரிவின் பணிப்பாளர், சமூக மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
  • சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் கடந்த 29 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
  • இது ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

பிரிவின் பணிப்பாளர், சமூக மருத்துவ நிபுணர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் கடந்த 29 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் மாதம் உடல் ரீதியாக சுறுசுறுப்பு மிகுந்த மாதமாக பெயரிடப்பட்டுள்ளதாகவும், ஏப்ரல் மாதத்தில் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்க பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

விசேடமாக, தொழில் புரியும் இடங்கள், பாடசாலைகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலும் இந்த செய்தியை கொண்டு செல்லும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது ஒவ்வொரு ஆண்டும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடல் சுறுசுறுப்பாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அனைவருக்கும் தெளிவூட்டுவதே இந்த ´உடல் ரீதியான சுறுசுறுப்பு´ மாதத்தின் நோக்கமாகும். இதன் ஊடாக, திடீர் மரணத்தை தவிர்த்தல், நீரிழிவு நோய், இருதய நோய், பக்கவாதம் போன்ற நோய்களில் இருந்து ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களைக் கட்டுபடுத்தவும், எலும்பு, தசைகள் மற்றும் மூட்டுகளின் வலிமைக்கும், புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுப்பதற்கும் உடல் சுறுசுறுப்பு மிக முக்கியமானது என்றும்; அவர் கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...