Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

நெல் பயிர்ச்செய்கை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிதி நிவாரணம்

T

The Leader Desk

மார்ச் 30, 2023 • 10:45 AM

நெல் பயிர்ச்செய்கை செய்த அனைத்து விவசாயிகளுக்கும் நிதி நிவாரணம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
  • அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
  • பெரும்போக பருவத்தில், மேலதிகமாக 30,000 மெற்றிக் தொன் நெல் அறுவடை கிடைத்துள்ளது.
  • தற்போது 50 கிலோ கிராம் யூரியா உர மூட்டை 10,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
எழுத்து அளவு:

என்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்...

பெரும்போக பருவத்தில், மேலதிகமாக 30,000 மெற்றிக் தொன் நெல் அறுவடை கிடைத்துள்ளது. எனவே விவசாயிகளுக்கு நிவாரண விலையில் தேவையான அனைத்து உரங்களையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலங்களில் உரங்களின் விலையை குறைப்பதற்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. தற்போது 50 கிலோ கிராம் யூரியா உர மூட்டை 10,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

மேலும், உரங்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் அல்லது கூப்பன்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்போம். இவ் வருடம், முதல் இரண்டு பிரதான பருவங்களுக்கு மேலதிகமாக இடைப்பட்ட பருவத்தில் விவசாயிகள் பயிரிட தயாராக உள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 30,000 ஏக்கரில் வெண்டைக்காய் பயிரிட விவசாயிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். மூன்று பருவங்களிலும் பயிரிடுவதன் மூலம் வெற்றிகரமான விளைச்சலை அடைய முடியும்.

அத்துடன், இம்முறை நெல் கொள்வனவு மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டிய அமைச்சர், மேலதிக பண ஒதுக்கீடுகள் தேவைப்படின் பணத்தை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அறுவடையில் பெறப்படும் நெல்லை அரிசியாக மாற்றி இலவசமாக வழங்கும் வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும்.

நெற்செய்கைக்கு மேலதிகமாக ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கும், உரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நிவாரண விலையில் உரங்களை வழங்க முடியும். இதனால் தனியாரின் வர்த்தக ஏகபோகத்தை உடைக்க முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது விவசாயத்திற்கு மேலதிகமாக நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கால்நடை அபிவிருத்திக்கான வேலைத்திட்டமும், இலங்கையில் திரவ பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், திரவ பால் பாவனையை அடுத்த வருடம் 100 வீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, முட்டையை இறக்குமதி செய்வதற்கான அங்கீகாரம் தற்போது கிடைத்துள்ளது. இருப்பினும், இரண்டு மூன்று மாதங்களுக்குள் உள் நாட்டில் முட்டை உற்பத்தியை அதிகரித்து, முட்டையின் விலையை குறைக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...