போப் பிரான்சிஸ் சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சில நாட்கள் இருக்க வேண்டும் என்று வாட்டிகன் செய்தி தொடர்பாளர் மேட்டியோ புருனி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதை அடுத்து, போப்பாண்டவர் ரோமின் ஜெமெல்லி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு மேற்கொண்ட பரிசோதனைகளில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . ஆனால் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
"போப் பிரான்சிஸ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதையடுத்து பலரும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.
அனைவரின் பிரார்த்தனைக்கு நன்றிகள்" என வாட்டிகன் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் அர்ஜென்டினாவில் பாதிரியாராக பயிற்சி மேற்கொண்ட போது நுரையீரல் தொற்று காரணமாக ஒரு பகுதி நுரையீரல் அகற்றப்பட்டதையடுத்து அவருக்கு அவ்வப்போது சுவாச பிரச்சனை ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
குருத்தோலை ஞாயிறு வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது. போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் அதில் கலந்துக்கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
போப் பிரான்சிஸ்ஸிற்கு ஏற்கனவே பெருங்குடல் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. முழங்காலில் நாள்பட்ட வலியின் காரணமாக அவர் சக்கர நாற்காலி அல்லது வாக்கிங் ஸ்டிக்கை பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், கடந்த புதன்கிழமை போப் பிரான்சிஸ் மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக அழைத்துச்செல்லப்பட்டார். அதேசமயம் அவர் நேற்று காலையில் செயிண்ட் பீட்ட்ர்ஸில் பார்வையாளர்களை சந்தித்த போது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாக வாட்டிகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் அனுமதி
T
The Leader Desk
மார்ச் 30, 2023 • 10:35 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- போப் பிரான்சிஸ் சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
- போப் பிரான்சிஸ் அர்ஜென்டினாவில் பாதிரியாராக பயிற்சி மேற்கொண்ட போது நுரையீரல் தொற்று காரணமாக ஒரு பகுதி நுரையீரல் அகற்றப்பட்டதையடுத்து அவருக்கு அவ்வப்போது சுவாச பிரச்சனை ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
- குருத்தோலை ஞாயிறு வரும் ஏப்ரல் 2 ஆம் திகதி அனுசரிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

