Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஹரக் கட்டா, குடு சலிந்து குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

T

The Leader Desk

மார்ச் 29, 2023 • 4:36 PM

ஹரக் கட்டா, குடு சலிந்து குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீதவான் திலின கமகே இன்று (29) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.
  • முந்தைய நாள் உத்தரவின்படி, அவர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
  • மடகஸ்கரில் இருந்து ´ஹரக் கட்டா´ மற்றும் ´குடு சலிந்து´ ஆகியோர் நாடு கடத்தப்பட்ட பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாதுகாப்பில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
எழுத்து அளவு:

நீதவான் திலின கமகே இன்று (29) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் உள்ள இரு சந்தேக நபர்களும் தடுப்புக்காவலில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டால், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்புவாய்ந்த அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் காவலில் அல்லது விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியின் காவலில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மடகஸ்கரில் இருந்து ´ஹரக் கட்டா´ மற்றும் ´குடு சலிந்து´ ஆகியோர் நாடு கடத்தப்பட்ட பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பாதுகாப்பில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட சந்தேக நபர்களாவர்.

சந்தேகநபர்கள் இருவரினதும் பாதுகாப்பது தொடர்பில் உரிய உத்தரவை பிறப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி றியன்சி அர்சகுலரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முந்தைய நாள் உத்தரவின்படி, அவர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்குவது என்பது குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

சந்தேகநபர்கள் இருவரையும் வெளியே அழைத்துச் செல்வதாக இருந்தால், கை கால்களை விலங்கிடுமாறும், மாகந்துரே மதுஷ், கொஸ்கொட தாரக மற்றும் டின்கிரி பிரியந்த ஆகியோர் உயிரிழந்த முறை குறித்தும் சட்டத்தரணிகள் குழு நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

தேசபந்து தென்னகோனின் குழுக்கள் அவர்களைக் கொல்லப் போவதாக செய்திகள் வெளியாகியிருந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

கொஸ்கொட தாரக கொல்லப்பட்ட தினத்திலும் இவ்வாறான செய்திகள் வெளியிடப்பட்டதாக தெரிவித்த சட்டத்தரணி குழு, சந்தேகநபர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு நீதிமன்றில் மேலும் கோரியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஹரக் கட்டா, குடு சலிந்து குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! | Tamil Leader | We Lead the Nation