சபாநாயகரும், அரசியலமைப்புப் பேரவையின் தலைவருமான மஹிந்த யாப்பா அபேவரதன தலைமையில் 24.03.2023ஆம் திகதி அரசியலமைப்புப் பேரவை கூடியபோதே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
அத்துடன், அரசியலமைப்பின் 41(ஆ) பிரிவின் கீழ், அரசியலமைப்புப் பேரவையினால் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது குறித்த விண்ணப்பப் படிவங்களும் பரிசீலிக்கப்பட்டன.
இதற்கு அமைய கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த விண்ணப்பப் படிவங்களில் குழுவின் உறுப்பினர்களாக நியமிப்பதற்கான நால்வரின் பெயர் ஏகமனதாக ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புக்கு அமைய கணக்காய்வாளர் நாயகம், பதவி அடிப்படையில் கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுவார்.
இக்கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான சாகர காரியவசம் மற்றும் கபீர் ஹாசிம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லாத கலாநிதி பிரதாப் ராமானுஜம், கலாநிதி தில்குஷி அனுலா விஜேசுந்தர மற்றும் கலாநிதி தினேஷா சமரரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
புதிய ஒம்புட்ஸ்மனை நியமிக்க அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம்
T
The Leader Desk
மார்ச் 28, 2023 • 2:10 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சபாநாயகரும், அரசியலமைப்புப் பேரவையின் தலைவருமான மஹிந்த யாப்பா அபேவரதன தலைமையில் 24.03.2023ஆம் திகதி அரசியலமைப்புப் பேரவை கூடியபோதே இதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது.
- அத்துடன், அரசியலமைப்பின் 41(ஆ) பிரிவின் கீழ், அரசியலமைப்புப் பேரவையினால் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்களை நியமிப்பது குறித்த விண்ணப்பப் படிவங்களும் பரிசீலிக்கப்பட்டன.
- இதற்கு அமைய கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த விண்ணப்பப் படிவங்களில் குழுவின் உறுப்பினர்களாக நியமிப்பதற்கான நால்வரின் பெயர் ஏகமனதாக ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

