வைத்திய துறையில் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த பாடசாலை மாணவி ஒருவரின் உடல் உறுப்புக்கள் 7 பேருக்கு பொருத்தப்பட்ட சம்பவம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது.
குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியில் உயர்தரம் பயிலும் 19 வயதுடைய விஹகனா ஆரியசிங்க என்ற யுவதி திடீர் உடல் நலக்குறைவால் மூளைச்சாவு உயிரிழந்த நிலையில் அவரின் உடல் உறுப்புக்கள் இவ்வாறு வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
குருணாகல், அம்பன்பொல நகரில் வசிக்கும் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் விஹகனா ஆரியசிங்க இளைய பிள்ளையாவார்.
அவருக்கு ஒரு மூத்த சகோதரியும் ஒரு சகோதரனும் உள்ளனர். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் வெற்றிகரமாக சித்தியடைந்த விஹங்கன குருணாகல் மலியதேவ மகளிர் கல்லூரியில் வணிக ரீதியில் உயர்தரப் பரீட்சைக்கு ஆங்கில மொழி மூலம் கல்வி கற்று வந்தவர் ஆவார்.
இந் நிலையில் விஹகனா மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த நிலையில் அவரது இதயம் மற்றும் நுரையீரல் மற்றுமொரு நோயாளிக்குப் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் விஹகனாவிடம் இருந்து எடுக்கப்பட்ட இரண்டு சிறுநீரகங்களும், ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு நோயாளிகளுக்கு வெற்றிகரமாக மாற்றப்பட்டுள்ளது.
விஹகனாவிடம் இருந்து எடுக்கப்பட்ட கல்லீரல் மற்றும் கண்களின் சவ்வுகள் மேலும் மூன்று பேரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உதவியுள்ளன.
விஹகனாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்புகள் மூலம் மொத்தம் 7 பேர் உயிர் காக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இதயம் மற்றும் நுரையீரல் இரண்டையும் ஒரே நோயாளிக்கு மாற்றுவதற்கான முதல் அறுவை சிகிச்சை இலங்கையின் சிறப்பு வைத்தியர்கள் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக ஆபத்தான நிலையிலிருந்த ஒருவருக்கு இந்த இரண்டு உறுப்புகளும் மாற்றப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்த உறுப்புகள் தனித்தனியாகப் பொருத்தப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் இதுபோன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது இலங்கையில் இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தன்னுயிரை கொடுத்து 7 பேரின் உயிர் காத்த பாடசாலை மாணவி!
T
The Leader Desk
மார்ச் 27, 2023 • 8:18 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- வைத்திய துறையில் இடம்பெற்று வருகின்றன.
- இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த பாடசாலை மாணவி ஒருவரின் உடல் உறுப்புக்கள் 7 பேருக்கு பொருத்தப்பட்ட சம்பவம் ஒன்று இலங்கையில் இடம்பெற்றுள்ளது.
- குருநாகல் மலியதேவ மகளிர் கல்லூரியில் உயர்தரம் பயிலும் 19 வயதுடைய விஹகனா ஆரியசிங்க என்ற யுவதி திடீர் உடல் நலக்குறைவால் மூளைச்சாவு உயிரிழந்த நிலையில் அவரின் உடல் உறுப்புக்கள் இவ்வாறு வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
- இந் நிலையில் விஹகனா மூளைச்சாவு அடைந்து உயிரிழந்த நிலையில் அவரது இதயம் மற்றும் நுரையீரல் மற்றுமொரு நோயாளிக்குப் பொருத்தப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

