Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

சுயநினைவு இழந்த பிரபல பின்னணி பாடகி - நடந்தது என்ன ?

T

The Leader Desk

மார்ச் 25, 2023 • 12:02 AM

சுயநினைவு இழந்த பிரபல பின்னணி பாடகி - நடந்தது என்ன ?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கல்கத்தாவில் தமிழ் குடும்பத்தில் பிறந்தவரான பாம்பே ஜெயஸ்ரீ , தனது பெற்றோர்களிடமிருந்து கர்நாடக இசையை கற்றுக்கொண்டார் .
  • பின்னணி பாடகிக்கான தமிழ்நாடு அரசின் விருது , பத்மஸ்ரீ , சங்கீத கலாநிதி விருது என ஏராளமான விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது .
  • அதனைத் தொடர்ந்து முறையாக இசையை கற்றுக்கொண்ட அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது காந்த குரலில் ரசிகர்களை கொள்ளை கொண்டார் .
எழுத்து அளவு:

கல்கத்தாவில் தமிழ் குடும்பத்தில் பிறந்தவரான பாம்பே ஜெயஸ்ரீ, தனது பெற்றோர்களிடமிருந்து கர்நாடக இசையை கற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து முறையாக இசையை கற்றுக்கொண்ட அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது காந்த குரலில் ரசிகர்களை கொள்ளை கொண்டார்.

அதனைத் தொடர்ந்து சினிமாவிலும் பின்னணி பாடகியாக களம்கண்ட ஜெயஸ்ரீ தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளில் ஏராளமான சூப்பர்ஹிட் திரைப்பட பாடல்களை பாடி அசத்தியுள்ளார். தமிழில் இளையராஜா, ஏ.ஆர்,ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற பிரபலமான இளையமைப்பாளர்களின் இசையில் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். சுயநினைவு இழந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதி.. பிரபல பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு நடந்தது என்ன ?

பின்னணி பாடகிக்கான தமிழ்நாடு அரசின் விருது, பத்மஸ்ரீ ,சங்கீத கலாநிதி விருது என ஏராளமான விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது லீவர்பூல் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ள ஜெயஸ்ரீ லிவர்பூலில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தார்.

அங்கு அவர் ஹோட்டல் அறையில் சுயநினைவின்றி கிடந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டதால் அவர் சுயநினைவை இறந்ததாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஜெயஸ்ரீக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாகவும், மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைத்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரின் உடல்நலன் சீரானதும் இந்தியா திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சுயநினைவு இழந்த பிரபல பின்னணி பாடகி - நடந்தது என்ன ? | Tamil Leader | We Lead the Nation