Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை!

T

The Leader Desk

மார்ச் 23, 2023 • 11:55 AM

ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தொடுக்கப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • இந்நிலையில், வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எச்எச் வர்மா, ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்தார்.
  • இந்நிலையில், தொடர்ந்து தண்டனை விவரத்தை வாசித்த நீதிபதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
  • மேலும், 30 நாள்குள் தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

தொடுக்கப்பட்ட வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பரபப்புரையில் கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றிய போது பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து தெரிவித்தார்.

எப்படி அனைத்து திருடர்களும் ´மோடி´ என்ற பெயரை பொதுவாக வைத்துள்ளனர் என்று அவர் கூறியிருந்தார். ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு எதிராக குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ் மோடி அவமதிப்பு வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கு விசாரணை சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

தீர்ப்புக்கு முன்னதாக பலத்த பாதுகாப்புடன் ராகுல் காந்தி நீதிமன்றத்திற்கு வருகை தந்தார். இந்நிலையில், வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எச்எச் வர்மா, ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும், தண்டனை விவரம் இன்றே வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், நீதிமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி காத்திருந்தார். அங்கு காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்துள்ளாதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தொடர்ந்து தண்டனை விவரத்தை வாசித்த நீதிபதி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். உடனடியாக ராகுல் காந்தி பிணைக்கு முறையிட்ட நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 30 நாள்குள் தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிணை பெற்ற ராகுல் காந்தி நீதிமன்றத்தில் இருந்து வெளியேறி தனது காரில் புறப்பட்டு சென்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ராகுல் காந்திக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை! | Tamil Leader | We Lead the Nation