Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

இலங்கையில் ஜூன் முதல் நடைமுறைக்கு வரும் தடை! வெளியானது அறிவிப்பு

T

The Leader Desk

மார்ச் 23, 2023 • 5:27 AM

இலங்கையில் ஜூன் முதல் நடைமுறைக்கு வரும் தடை! வெளியானது அறிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அனில் ஜாசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
  • அதன்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • நாட்டில் தேவைக்கு அதிகமாக இருப்புக்கள் இருப்பதால், பிளாஸ்டிக் துகள்களின் இறக்குமதியை அமைச்சு கட்டுப்படுத்தும்.
எழுத்து அளவு:

அனில் ஜாசிங்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் சில பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், சுற்றுச்சூழலுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை வெளியிடுவதை குறைக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஒருமுறை மாத்திரமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

அதன்படி, ஜூன் மாதம் முதல் பிளாஸ்டிக் கப், ஸ்பூன், தட்டுகள், முட்கரண்டி, மாலைகள் மற்றும் பாய்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது. நாட்டில் தேவைக்கு அதிகமாக இருப்புக்கள் இருப்பதால், பிளாஸ்டிக் துகள்களின் இறக்குமதியை அமைச்சு கட்டுப்படுத்தும்.

பிளாஸ்டிக் தட்டுகளை இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தவும், பசுமைப் பொருட்களை மேம்படுத்துவதற்கு ஊக்குவிப்பதற்காகவும் அமைச்சு எதிர்பார்த்துள்ளது.

மேற்கண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதன் மூலம், சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களை பயன்படுத்தி இத்தொழிலை தொடங்க காத்திருப்போரை ஊக்குவிக்கும்.

இது மக்களின் வாழ்க்கைக்கு உதவும். சந்தை தேவை மற்றும் பிற காரணிகளை பொறுத்து ஏனைய நாடுகளில் இருந்து சில பிளாஸ்டிக் பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, ​​அமைச்சு முடிந்தவரை பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத சூழலை உருவாக்க முயற்சித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...