Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் மகிந்த தரப்பினர்

T

The Leader Desk

மார்ச் 23, 2023 • 5:27 AM

அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் மகிந்த தரப்பினர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
  • உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மே தினக் கொண்டாட்டத்தின் பிரசார நடவடிக்கைகள் தொடர்பான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரு.சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.
  • கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மற்றும் பொஹொட்டுவ முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எழுத்து அளவு:

விஜேராம மாவத்தையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.

கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச மற்றும் பொஹொட்டுவ முக்கியஸ்தர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மற்றும் மே தினக் கொண்டாட்டத்தின் பிரசார நடவடிக்கைகள் தொடர்பான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரு.சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலை அடிப்படையாக கொண்டு அலுவலகங்கள் திறப்பு, மே அணிவகுப்பு ஏற்பாடுகள், தொகுதி மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டத் தொடர் குறித்து நீண்ட விவாதம் நடந்துள்ளது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்திற்கு ஜனாதிபதி எவ்வாறு ஆதரவளிக்க வேண்டும் என்பது குறித்து எதிர்வரும் நாட்களில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மே தினத்தை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து மாவட்ட மற்றும் தொழிற்சங்க தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் எனவும், தீர்மானம் எடுப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த மற்றும் காமினி லொக்குகே தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகும் மகிந்த தரப்பினர் | Tamil Leader | We Lead the Nation