அந்தக் கைகளுடன் சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று(21) இரவு இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த நபர் தனது வீட்டின் முன்பாக நின்று கொண்டிருந்த போது, சந்தேக நபர் கூரிய ஆயுதத்தால் அவரது கைகளைத் துண்டித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்தவர் மொரட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. காயமடைந்த நபர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் மொரட்டுவை காவல்துறையினருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபர் துண்டிக்கப்பட்ட கை பாகங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு எடுத்துசெல்லப்பட்ட கை பாகங்களை கண்டுபிடிக்கும் நோக்கில் காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தனிப்பட்ட முரண்பாட்டின் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் நடந்த கொடூரம்..! கைகளை துண்டாக வெட்டி எடுத்து சென்ற நபர்
T
The Leader Desk
மார்ச் 22, 2023 • 4:42 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- அந்தக் கைகளுடன் சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
- இந்த சம்பவம் நேற்று(21) இரவு இடம்பெற்றுள்ளது.
- சம்பவத்தில் காயமடைந்தவர் மொரட்டுவை கொரலவெல்ல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
- காயமடைந்த நபர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

