Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்படும் - எச்சரித்த ஐக்கிய நாடுகள் சபை..!

T

The Leader Desk

மார்ச் 22, 2023 • 4:42 PM

வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் ஏற்படும் - எச்சரித்த ஐக்கிய நாடுகள் சபை..!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தண்ணீர் பஞ்சம் ஏற்படுமென ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளன.
  • காற்று மாசுப்பாடு புவியில் காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, புவி வெப்பமடைதலை அதிகரித்து நீர் பற்றாக்குறையை தீவிரமாக்கியுள்ளது.
  • ஒரு ஆண்டுக்கு 300 கோடி மக்கள் நீர் பற்றாக்குறையால் வாழ்கின்றனர் என ஐ.நாவின் ஆய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
எழுத்து அளவு:

தண்ணீர் பஞ்சம் ஏற்படுமென ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளன.

வளர்ந்து வரும் நுகர்வு கலாச்சாரம் மனிதனின் அடிப்படைத் தேவையை தாண்டி நிறைய விசயங்களை செய்கிறது.

இதனால் அளவுக்கு அதிகமான தொழிற்சாலைகளும், வாகனங்களும், பூமியின் மீது துளைக்கப்படும் ராட்சச குழாய்களும் பூமி அதிக அளவு வெப்பமடைய காரணமாக இருக்கின்றன.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உலக நாடுகள் ஓர் ஆபத்தான பாதையில் பயணிக்கின்றன. நுகர்வு கலாச்சாரம், காலநிலை மாற்றம் மற்றும் அதி தீவிர வளர்ச்சியினால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது” என எச்சரித்துள்ளது.

அளவுக்கு அதிகமான மாசுபாடு தொழிற்சாலைகளின் மூலமும், அதிலிருந்து வெளிப்படும் புகையின் மூலமும் உண்டாகிறது.

மேலும் மனிதர்களின் பயன்பாட்டிலுள்ள வாகனங்கள் கூட இதற்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளன. காற்று மாசுப்பாடு புவியில் காலநிலை மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, புவி வெப்பமடைதலை அதிகரித்து நீர் பற்றாக்குறையை தீவிரமாக்கியுள்ளது.

ஒரு ஆண்டுக்கு 300 கோடி மக்கள் நீர் பற்றாக்குறையால் வாழ்கின்றனர் என ஐ.நாவின் ஆய்வு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

இது பற்றி ஐ.நாவின் பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தரெஸ் கூறியதாவது, “மனித குலத்தின் உயிர் நாடியான நீர் மாசுபாட்டாலும், காலநிலை மாற்றத்தாலும் தண்ணீர் பஞ்சம் உண்டாகிறது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் நம் கண் முன்னே நடந்து கொண்டிருக்கிறது. எத்தனையோ காடுகளில் வன விலங்குகள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றன.

மனிதர்களும் அதன் தீவிரத்தை கடந்து பத்து ஆண்டுகளாக சந்தித்து வருகின்றனர். உலக தண்ணீர் தினமான இன்று தண்ணீர் பயன்பாட்டின் அவசியத்தையும், அதனை எவ்வளவு சிக்கமான செலவழிக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து, முடிந்த அளவு காற்றை மாசுப்படுத்தாமல் இருப்பது அவசியமென்ற விழிப்புணர்வை தரவே ஐ.நா இத்தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...