Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிரந்தர தீர்வு அல்ல

T

The Leader Desk

மார்ச் 22, 2023 • 3:13 PM

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிரந்தர தீர்வு அல்ல

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நீர்வளத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் .
  • உலக நீர் தின விழா இன்று (22) இரத்மலானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுக்கான சிறப்பு மையத்தில் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .
  • அத்துடன் , நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் 25 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய ஊழியர்களுக்கு தங்க நாணயமும் , கடந்த க .
  • த உயர் தர பரீட்சையில் 3 ஏ சித்திபெற்ற ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது .
எழுத்து அளவு:

நீர்வளத்தை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டு மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

உலக நீர் தின விழா இன்று (22) இரத்மலானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர் மற்றும் துப்புரவேற்பாட்டுக்கான சிறப்பு மையத்தில் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடைபெற்றன.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் நிசாந்த ரணதுங்கவின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில், யூ.என்.டி.பி. இலங்கை வதிவிட பிரதிநிதி அஷூசா குபோட்டா சிறப்புரையாற்றினார்.

உலக நீர் தினத்தை முன்னிட்டு நாடாளவீய ரீதியில் நடாத்தப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான ஓவியம், கட்டுரை, மேடை நாடகம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன், நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையில் 25 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய ஊழியர்களுக்கு தங்க நாணயமும், கடந்த க.பொ.த உயர் தர பரீட்சையில் 3 ஏ சித்திபெற்ற ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டபிள்யூ.எஸ்.சமரதிவாகர உட்பட அமைச்சின் உயரதிகாரிகள், மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொருளாதார பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் கடன் என்பது இடைக்கால தீர்வே. அது நிரந்தர தீர்வு அல்ல. எனவே, நிலையானதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உள்ளக பொறிமுறையே அவசியம். அதாவது தேசிய உற்பத்தியை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு உள்ளக கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைத்துள்ள நிலையில், இலங்கை மீது நிதி நிறுவனங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி உள்ளிட்டவற்றின் உதவியை பெறுவதற்கு இது வழிவகுக்கும்.

எமது நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு கூட்டு பொறுப்பு என்பது அவசியம். அதனையே இன்றைய தலைமையினர் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...