Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

பொலிஸ் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய சம்பவம்

T

The Leader Desk

மார்ச் 21, 2023 • 3:30 AM

பொலிஸ் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய சம்பவம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
  • தென்மராட்சி - எழுதுமட்டுவாழ் பகுதியில் கொடிகாமம் பொலிஸார் மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது 16 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது.
  • அதனை அடுத்து, குறித்த சந்தேக நபரின் வங்கி கணக்கை பரிசீலித்த போது பெரும் தொகை பணப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டதேடு, குறித்த சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மன்னாரில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது எனவும் கண்டறியப்பட்டது.
  • அதனை அடுத்து சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
எழுத்து அளவு:

சந்தேக நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் உரிமையாளரான பொலிஸ் உத்தியோகத்தர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, அவரது சகோதரரான பிறிதொரு பொலிஸ் உத்தியோகத்தர் தலைமறைவாகியுள்ளார்.

கடந்த வாரம், யாழ். தென்மராட்சி - எழுதுமட்டுவாழ் பகுதியில் கொடிகாமம் பொலிஸார் மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது 16 கிலோ கஞ்சா மீட்கப்பட்டது.

இதன்போது, அதைக் கொண்டு வந்தவர் தப்பிச் சென்றிருந்தார். சில தினங்களில் பின்னர் குறித்த நபர் யாழ்ப்பாணம் பொலிஸில் சரணடைந்திருந்தார்.

அதனை அடுத்து, குறித்த சந்தேக நபரின் வங்கி கணக்கை பரிசீலித்த போது பெரும் தொகை பணப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டதேடு, குறித்த சந்தேக நபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மன்னாரில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரது எனவும் கண்டறியப்பட்டது.

அதனை அடுத்து சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதனை அடுத்து, மோட்டார் சைக்கிள் உரிமையாளரான பொலிஸ் உத்தியோகத்தரை கொடிகாமம் பொலிஸார் கைது செய்து சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர் படுத்தியதோடு, 3 நாட்கள் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்கவும் அனுமதி பெற்றனர்.

இந்நிலையில், குறித்த மோட்டார் சைக்கிளை கடந்த 10 வருடங்களாக சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தனது சகோதரனே பயன்படுத்தி வருவதாக கைதான பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை மீண்டும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளது.

இதேவேளை, சுண்ணாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...