சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், எழுவர் காயமடைந்துள்ளனர். தெய்வாதீனமாக எவருக்கும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
பண்டாரவளை பகுதியில் (19) நேற்று மாலை முதல் அடை மழை பெய்துள்ளது. இந்நிலையில் கபரகலை தோட்ட வைத்தியசாலை அமைந்துள்ள பகுதியிலேயே மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் இரண்டு லயன் குடியிருப்பு தொகுதிகள் அமைந்துள்ளன.
30 முதல் 40 வரையான வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட கிளை தெரிவித்துள்ளது.
காயமடைந்த எழுவரில் இருவர் கொஸ்லந்த வைத்தியசாலையிலும், இருவர் தியதலாவ வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள 62 குடும்பங்களைச் சேர்ந்த 220 இற்கும் மேற்பட்டோர் பூனாகலை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று இன்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
கபரகல மண்சரிவு - சேத விபரங்கள் வௌியானது!
T
The Leader Desk
மார்ச் 20, 2023 • 5:36 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- சுமார் 40 வீடுகள் சேதமடைந்துள்ளன.
- பண்டாரவளை பகுதியில் (19) நேற்று மாலை முதல் அடை மழை பெய்துள்ளது.
- அப்பகுதியில் இரண்டு லயன் குடியிருப்பு தொகுதிகள் அமைந்துள்ளன.
- முதல் 40 வரையான வீடுகள் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை மாவட்ட கிளை தெரிவித்துள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

