Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஈழத்தில் தொடரும் பேரினவாத ஆக்கிரமிப்பு - தமிழர்களிடமிருந்து பறிபோகும் மற்றுமொரு புராதன சின்னம்!

T

The Leader Desk

மார்ச் 17, 2023 • 8:19 AM

ஈழத்தில் தொடரும் பேரினவாத ஆக்கிரமிப்பு - தமிழர்களிடமிருந்து பறிபோகும் மற்றுமொரு புராதன சின்னம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள வரலாற்று இடங்களை சிறிலங்கா தொல்பொருள் திணைக்களம் அபகரித்து வரும் நிலையிலேயே நெடுந்தீவிலும் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • | Jaffna Delft Island Vediyarasan Fort Lost Tamils ஆகவே கறைபடியாத வீரத் தமிழர் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்கும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • கி.மு 200ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாண இராசதானிகளின் கீழ் இருந்த நெடுந்தீவு மற்றும் காரைநகர் பகுதிகளை ஆட்சி செய்த சிற்றரசனே வெடியரச மன்னன்.
எழுத்து அளவு:



இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலுள்ள வரலாற்று இடங்களை சிறிலங்கா தொல்பொருள் திணைக்களம் அபகரித்து வரும் நிலையிலேயே நெடுந்தீவிலும் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நெடுந்தீவு தமிழர்களுடைய வரலாற்றை பறைசாற்றும் தலைசிறந்த சுற்றுலாத்தளமாக காணப்படும் நிலையில் அங்கு திட்டமிட்டு பௌத்தமயமாக்கல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனுமதி இன்றி விளம்பரப் பலகை
ஈழத்தில் தொடரும் பேரினவாத ஆக்கிரமிப்பு - தமிழர்களிடமிருந்து பறிபோகும் மற்றுமொரு புராதன சின்னம்! | Jaffna Delft Island Vediyarasan Fort Lost Tamils

இவ்வாறான நிலையில், கோட்டை மற்றும் மாவிலி இறங்குதுறைப் பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதி இன்றி சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் விளம்பர பலகையும் நாட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு நாட்டப்பட்டுள்ள பதாதையை அகற்றி கோட்டையின் பாரம்பரியத்தையும், வரலாற்றையும் பேண உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றின் வருமான முகாமைத்துவம் மற்றும் பராமரிப்புப் பணிகள் சிறிலங்கா தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாணம் நெடுந்தீவிலும் இவ்வாறான சம்பவம் தற்போது இடம்பெற்றுள்ளது.

பௌத்த திணிப்பிற்கு முற்றுப்புள்ளி

2023 03 17 09 1

ஈழத்தில் தொடரும் பேரினவாத ஆக்கிரமிப்பு - தமிழர்களிடமிருந்து பறிபோகும் மற்றுமொரு புராதன சின்னம்! | Jaffna Delft Island Vediyarasan Fort Lost Tamils

ஆகவே கறைபடியாத வீரத் தமிழர் வரலாற்றுக்குள் பௌத்தத்தை திணிக்கும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் அதிகாரிகள் இனங்களுக்கிடையில் விரோதங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையே தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டு மக்களுக்குள் குரோதங்களை ஏற்படுத்தி விட்டு ஒருபோதும் பொருளாதார மீட்சியைப் பெற முடியாது என்பதனை உரிய தரப்பினர் உணர்ந்துகொள்ள வேண்டும்.

பௌத்த எச்சங்களாக சித்தரிப்பு

2023 03 17 09 2
ஈழத்தில் தொடரும் பேரினவாத ஆக்கிரமிப்பு - தமிழர்களிடமிருந்து பறிபோகும் மற்றுமொரு புராதன சின்னம்! | Jaffna Delft Island Vediyarasan Fort Lost Tamils

தமிழர்களுடைய வரலாற்றை திரிவுபடுத்தி அதனூடாக மேற்கொள்ளப்படவுள்ள பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை உரிய அதிகாரிகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

கி.மு 200ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாண இராசதானிகளின் கீழ் இருந்த நெடுந்தீவு மற்றும் காரைநகர் பகுதிகளை ஆட்சி செய்த சிற்றரசனே வெடியரச மன்னன்.

இந்த நிலையில் வெடியரசன் கோட்டையின் எச்சங்களை பௌத்த தாது கோபுர எச்சங்களாக சித்தரித்து சிறிலங்கா தொல்பொருள் திணைக்களம் பௌத்தமயமாக்கல் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...