Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

கொரோனா காலப்பகுதியில் 90 வீதமான மாணவர்களின் கல்வி அறிவு பாதிப்பு – கல்வி அமைச்சு

T

The Leader Desk

மார்ச் 17, 2023 • 6:46 AM

கொரோனா காலப்பகுதியில் 90 வீதமான மாணவர்களின் கல்வி அறிவு பாதிப்பு – கல்வி அமைச்சு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கல்வி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அண்மையில் நடத்தப்பட்டுள்ள கணக்கெடுப்பு அறிக்கை தெரியவந்துள்ளது.
  • குறித்த அறிக்கையின் படி, மூன்றாம் வகுப்பு குழந்தைகளில் சுமார் 90 சதவீதம் பேர் போதிய கல்வியறிவு அல்லது அல்லது எண்களைப் பற்றிய அறிவைப் பெற முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.
  • அதன்படி, 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரையிலான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
  • இந்த கணக்கெடுப்பிற்கு நாட்டின் ஒவ்வொரு மாகாணத்தையும் உள்ளடக்கிய ஆயிரத்து 9 பாடசாலைகளில் இருந்து 3 ஆம் வகுப்பு படிக்கும் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

கல்வி கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக அண்மையில் நடத்தப்பட்டுள்ள கணக்கெடுப்பு அறிக்கை தெரியவந்துள்ளது.

குறித்த அறிக்கையின் படி, மூன்றாம் வகுப்பு குழந்தைகளில் சுமார் 90 சதவீதம் பேர் போதிய கல்வியறிவு அல்லது அல்லது எண்களைப் பற்றிய அறிவைப் பெற முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கடந்த கொரோனா காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டதால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளன கல்வி பாதிப்பு குறித்து கல்வி அமைச்சு அண்மையில் விசேட கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

அதன்படி, 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரையிலான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பிற்கு நாட்டின் ஒவ்வொரு மாகாணத்தையும் உள்ளடக்கிய ஆயிரத்து 9 பாடசாலைகளில் இருந்து 3 ஆம் வகுப்பு படிக்கும் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல், எண்கள் மற்றும் அடிப்படை கணித அறிவு உள்ளிட்ட பல துறைகளில் இவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது, 90 சதவீத மாணவர்கள் போதிய கல்வியறிவு அல்லது எண்கள் பற்றிய அறிவைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், கணக்கெடுப்பில் பங்கேற்ற குழந்தைகளில் 27 சதவீதம் பேர் கேட்கும் திறனைப் பெற்றுள்ளனர். கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களின் கேட்டல் திறமையில் 73 சதவீத குழந்தைகள் தோல்வியடைந்துள்ளனர்.

பேசும் திறனை எதிர்கொண்ட குழந்தைகளில் 20 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதுடன், 80 சதவீத மாணவர்கள்; தோல்வியடைந்துள்ளனர்.

கணக்கெடுப்பில் பங்கேற்ற குழந்தைகளில் 37 சதவீதம் பேர் படிக்கும் திறனையும், 34 சதவீதம் பேர் மட்டுமே எழுதும் திறனையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

குழந்தைகளின் எண் அறிவுத் தேர்வில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சுமார் 7 சதவீத மாணவர்கள் மாத்திரமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...