Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

பொது மக்களுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்!

T

The Leader Desk

மார்ச் 15, 2023 • 12:21 PM

பொது மக்களுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • எரிசக்தி மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக அபேகுணவர்தனவினால் இன்று (15) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
  • மின்சார நுகர்வோர் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் ஆகியவற்றால் இந்த மேன்முறையீட்டு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
எழுத்து அளவு:

உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எரிசக்தி மன்றத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக அபேகுணவர்தனவினால் இன்று (15) இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

90 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கான மின்சாரக் கட்டணத்தில் நியாயமற்ற அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மின் கட்டண உயர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மின்சார நுகர்வோர் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் ஆகியவற்றால் இந்த மேன்முறையீட்டு மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில், மின் கட்டணத்தை திருத்தியமைக்கும் அமைச்சரவையின் சமீபத்திய முடிவு சட்டத்திற்கு எதிரானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அதிகாரங்களை அமைச்சரவை குறைத்துள்ளதாக மேன்முறையீட்டு மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...