Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

போர்க் குற்றவாளியாகக் கருதப்படும் இராணுவ அதிகாரி ஐ.நாவில்: வெடித்தது சர்ச்சை

T

The Leader Desk

மார்ச் 14, 2023 • 10:19 AM

போர்க் குற்றவாளியாகக் கருதப்படும் இராணுவ அதிகாரி ஐ.நாவில்: வெடித்தது சர்ச்சை

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • களமுனைகளில் செயற்பட்ட இராணுவத்தினர் மீதும் சர்வதேச ரீதியில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
  • சர்ச்சைக்குள்ளான சிறிலங்கா இராணுவ அதிகாரி அதேவேளை, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகமும் இந்தக் குற்றச்சாட்டுகளை நம்பகமானதாகக் கண்டறிந்துள்ளது.
  • சித்திரவதை குற்றச்சாட்டுக்கள் மற்றும் போர்க்குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ அதிகாரி, மேஜர் ஜெனரல் குலதுங்க, வவுனியா ஜோசப் முகாமில், 2016-2017 வரை பணியாற்றியுள்ளார்.
எழுத்து அளவு:

களமுனைகளில் செயற்பட்ட இராணுவத்தினர் மீதும் சர்வதேச ரீதியில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், போர்க்குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள சிறிலங்காவின் இராணுவ அதிகாரி ஒருவர், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வில் பங்குபற்றியுள்ளமை பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

மனித உரிமைகள் அமர்வில், இவரின் பங்கேற்பை கனேடிய சட்டத்தரணி ஒருவர் பகிரங்க கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில், சிறிலங்காவின் இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் குலதுங்க பங்கேற்றமை தொடர்பில், கனேடிய சட்டத்தரணியும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் நிபுணத்துவ உறுப்பினருமான வி.ஜே.கிரான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சர்ச்சைக்குள்ளான சிறிலங்கா இராணுவ அதிகாரி

அதேவேளை, மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகமும் இந்தக் குற்றச்சாட்டுகளை நம்பகமானதாகக் கண்டறிந்துள்ளது.

சித்திரவதை குற்றச்சாட்டுக்கள் மற்றும் போர்க்குற்றங்களைப் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட இராணுவ அதிகாரி, மேஜர் ஜெனரல் குலதுங்க, வவுனியா ஜோசப் முகாமில், 2016-2017 வரை பணியாற்றியுள்ளார்.

கேள்வியெழுப்பியுள்ள கனேடிய சட்டத்தரணி

இவர் மீது போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், இவர் எவ்வாறு மனித உரிமைகள் தொடர்பான அமர்வில் பங்குபற்ற முடியும் எனவும் கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், அவர் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடமுடியுமா என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவின் நிபுணத்துவ உறுப்பினரான வி.ஜே.கிரான் வினவியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...