Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

இந்துக்களின் வழிபாட்டிடத்தை அழிக்க அரச அங்கிகாரம்

T

The Leader Desk

மார்ச் 13, 2023 • 4:05 PM

இந்துக்களின் வழிபாட்டிடத்தை அழிக்க அரச அங்கிகாரம்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வழங்கியமை தொடர்பில் அப்பகுதி மக்களிடையே எதிர்ப்பு நிலவி வருகின்றது.
  • அறுவடைக்குப் பிறகு, கிராம மக்கள் ஒவ்வோர் ஆண்டும் பாறையின் உச்சியில் தமது அறுவடைகளை வைத்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள்.
  • இந்நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பை கருத்திற் கொண்டு வவுனியா பிரதேச செயலாளர் ஞா.கமலதாசன் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர் த.யோகராஜா ஆகியோர் மார்ச் 8ஆம் திகதி அவ்விடத்திற்கான கண்காணிப்பு பயணத்தில் இணைந்தனர்.
எழுத்து அளவு:

வழங்கியமை தொடர்பில் அப்பகுதி மக்களிடையே எதிர்ப்பு நிலவி வருகின்றது.

வவுனியா மாவட்டத்தின் பூவரசங்குளம் பகுதியில் பாறை ஒன்றை வெட்ட வெளிநபர் ஒருவருக்கு பிரதேச செயலாளர் அனுமதி வழங்கியுள்ளதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தப் பாறையில் இருந்து கருங்கற்களை குவாரி எடுப்பதை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கும் கிராம மக்கள், இந்த மலை பல ஆண்டுகளாக மத நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

அந்தப் பாறையின் உச்சியில் அப்பகுதி மக்கள் ஆதிகாலம் முதலே விநாயகப் பெருமானை வழிபட்டு வருவதாக மாகாண செய்தியாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

அறுவடைக்குப் பிறகு, கிராம மக்கள் ஒவ்வோர் ஆண்டும் பாறையின் உச்சியில் தமது அறுவடைகளை வைத்து சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள்.

இந்நிலையில் பொதுமக்களின் எதிர்ப்பை கருத்திற் கொண்டு வவுனியா பிரதேச செயலாளர் ஞா.கமலதாசன் மற்றும் உள்ளுராட்சி மன்ற தலைவர் த.யோகராஜா ஆகியோர் மார்ச் 8ஆம் திகதி அவ்விடத்திற்கான கண்காணிப்பு பயணத்தில் இணைந்தனர்.

அந்த இடத்தில் பழங்காலத்திலிருந்தே தாங்கள் வழிபட்டு வந்த கல் தூண் தற்போது மறைந்து விட்டதாகவும் அதனையடுத்து அந்த இடத்தில் சமீபத்தில் விநாயகர் சிலை நிறுவப்பட்டு வழிபட்டு வருவதாகவும் கிராம மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த பாறை வழிபாட்டுத்தலம் என்பதை அறிந்த பிராந்திய செயலாளர், தொல்பொருள் திணைக்களம் மற்றும் சுற்றாடல் அதிகார சபையுடன் கலந்துரையாடி இது தொடர்பில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதேசவாசிகளுக்கு அறிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அதிகாரசபை, சுற்றுலா சபை, தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு திணைக்களம் போன்றன, வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களின் காணிகளை பலவந்தமாக கையகப்படுத்தியதாக தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

300.jpeg

400.jpeg

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...