Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் -மைத்திரியின் மனுவை விசாரிக்க ஐந்து நீதியரசர்கள்

T

The Leader Desk

மார்ச் 15, 2023 • 3:04 AM

ஈஸ்டர் தாக்குதல் -மைத்திரியின் மனுவை விசாரிக்க ஐந்து நீதியரசர்கள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செய்யுமாறு கோரி முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (14) தீர்மானித்தது.
  • மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வில் மனு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றின் சிரேஷ்ட நீதியரசர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன அறிவித்தார்.
  • மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன, ஏ.
எழுத்து அளவு:

செய்யுமாறு கோரி முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த ரிட் மனுவை ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (14) தீர்மானித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன, ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய அமர்வில் மனு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றின் சிரேஷ்ட நீதியரசர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன அறிவித்தார்.

ரிட் மனு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும் வரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் உள்ள வழக்கை அழைக்க வேண்டாம் என்றும் நீதியரசர், கோட்டை நீதவானுக்கு உத்தரவிட்டார்.

முன்னாள் அதிபருக்கு எதிராக முறைப்பாடு

முன்னாள் அதிபருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் 298 ஆவது பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி, அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஜேசுராஜ் கணேசன் ஆகியோர், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தனிப்பட்ட முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

கொலை வரம்பில் வராத மரணம் விளைவிக்கும் குற்றத்துக்கு சமமான கவனமற்ற செயலை செய்து பலரின் உயிரிழப்பை ஏற்படுத்தியத்தியமைக்கு, தாக்குதல் தினத்தன்று பாதுகாப்பு அமைச்சராகவும், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராகவும் செயற்பட்ட முன்னாள் அதிபரே பொறுப்பு என்று மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஏற்கவியலாத சாட்சியங்கள் மற்றும் செவிவழிச் சாட்சியங்களை கருத்திற்கொண்டு நீதவான் நோட்டீஸ் பிறப்பித்திருந்ததாகவும் தனது விருப்புரிமை அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்த கோட்டை நீதவான் தவறிவிட்டார் என்றும் மைத்திரிபால சிறிசேன தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஈஸ்டர் தாக்குதல் -மைத்திரியின் மனுவை விசாரிக்க ஐந்து நீதியரசர்கள் | Tamil Leader | We Lead the Nation