Tamil Leader News
முக்கியம்
லூலாவின் பதில்: ராஜதந்திர எல்லைகள் குறித்து இலங்கையில் விவாதம்!●ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சட்டமூலத்தை வாபஸ் பெறுக - அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கோரிக்கை!●சூறாவளி அபாயம்: இலங்கையின் 25 படகுகளுக்கு இந்தியக் கடல் எல்லை திறப்பு!●ஞானசார தேரரை விடுவிக்குமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுக்கவில்லை!●தமிழ் சினிமா சாதனைகளை முறியடித்து ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ முதலிடத்தில்!●சீனத் தொழில்நுட்பச் சந்தையில் செயற்கை நுண்ணறிவுப் பங்குச் சந்தைக் குமிழி வெடித்தது!●பிரேசில் தேர்தலுக்கு ட்ரம்ப் குற்றச்சாட்டு: தோல்வியடைந்த கட்சி முடிவை ஏற்றுக்கொண்டது!●போர் நெருக்கடிக்கு மத்தியில் இஸ்ரேல் வாக்குச்சாவடிகளில் சாதனை அளவிலான நெரிசல்!●பெண்களின் மாதவிடாயைத் தெய்வமாகப் போற்றும் காமாக்யா ஆலயம்!●கிரிஷ் வழக்கு: பெற்றோரின் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி நாமல் விடுத்த பிணை கோரிக்கை!●
செய்திகள்

பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் மரணம்! சந்தேகநபரை காட்டிக்கொடுத்த ஏகல்

T

The Leader Desk

மார்ச் 15, 2023 • 2:58 AM

பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் மரணம்! சந்தேகநபரை காட்டிக்கொடுத்த ஏகல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • இத்தேடுதலின் போது தான் முகங்கொடுத்த விபரத்தை வெளியிட்ட ஜயரத்ன, சந்தேகநபர் கைது பெண்ணின் சடலம், வயலில் சேற்றுக்குள் அமுல்த்தப்பட்டு, அதன்மேல் நாற்றுகள் நாட்டப்பட்டுள்ளமை முதலில் கண்டறியப்பட்டது.
  • சந்தேகநபரை கண்டுப்பிடிப்பதற்கு வயல்வெளியில் இரண்டு நாற்றுக்களை கழற்றி 'ஏகல்' என்ற மோப்பநாய் உதவி புரிந்துள்ளதாக அஸ்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கண்டுப்பிடிப்பதற்கு வயல்வெளியில் இரண்டு நாற்றுக்களை கழற்றி 'ஏகல்' என்ற மோப்பநாய் உதவி புரிந்துள்ளதாக அஸ்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏகல்
சந்தேகநபரை கண்டுபிடிப்பதற்காக, களத்தில் இறக்கப்பட்ட பொலிஸ் மோப்பநாயான “ஏகல்” வயல்வெளியில் இரண்டு நாற்றுக்களை கழற்றியதன் பின்னர் வழங்கிய துப்பின் மூலமே சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இரண்டு நாற்றுக்களை கழற்றிய பொலிஸ் மோப்பநாயான ‘ஏகல்’ மலைகளை கடந்து நான்கு கிலோ மீற்றர் மிகவும் கடுமையான பயணத்தை மேற்கொண்டு, சந்தேக நபரின் வீட்டுக்குள் நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி, அஸ்கிரிய பொலிஸ் மோப்ப நாய் பிரிவின் பொலிஸ் கான்ஸ்ட பிள் பீ.ஜி. ஜயரத்ன என்பவரால் பொலிஸ் மோப்பநாய் வழிநடத்தப்பட்டது.

அப்பிரிவின் உப-பொலிஸ் பரிசோதகர் சந்திரவங்ச பெரேரா, அங்கு கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றினர்.

இத்தேடுதலின் போது தான் முகங்கொடுத்த விபரத்தை வெளியிட்ட ஜயரத்ன,

சந்தேகநபர் கைது
பெண்ணின் சடலம், வயலில் சேற்றுக்குள் அமுல்த்தப்பட்டு, அதன்மேல் நாற்றுகள் நாட்டப்பட்டுள்ளமை முதலில் கண்டறியப்பட்டது.

களத்தில் இறக்கப்பட்ட மோப்ப நாய் இரண்டு நாற்றுகளை கழற்றி துப்பு பொடுத்தது. அதன்பின்னர் என்னையும் இழுத்துக்கொண்டு வயலுக்குள் சென்று, வயலில் இருந்து மேலேறியது.

பின்னர் தேயிலைத்தோட்டத்துக்குள் புகுந்த “ஏகல்” என்னையும் இழுத்துக்கொண்டே மேடுகளில் ஏறி, பள்ளங்களில் இறங்கி சுமார் நான்கு கிலோமீற்றருக்கு அப்பால் சென்று வீடொன்றுக்கு முன்பாக நின்றுக்கொண்டது.

அந்த வீட்டுக்கு முன்பாக நின்றிருந்த நபரொருவரை கடந்து சென்ற “ஏகல்” அந்த வீட்டை ஒரேயொருமுறை சுற்றி வந்து வீட்டுக்குள் புகுந்து கொண்டது. வீட்டுக்குள் புகுந்துக்கொண்ட “ஏகல்”, என்னையும் இழுத்துக்கொண்டு வீட்டுக்குள் ஓர் அறைக்குள் சென்று, அங்கிருந்த கட்டிலை முகர்ந்து கொண்டே அதன் கீழே அமர்ந்துக்கொண்டது.

அதன்பின்னரே, அவ் வீட்டில் இருந்த இராணுவ சிப்பாய், சந்தேகத்தின் பேரில் அலவத்துக்கொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் மோப்ப நாயான “ஏகல்” இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் பல குற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்வதற்கான துப்பை துலங்கியுள்ளதாக கண்டி அஸ்கிரிய பொலிஸ் மோப்பநாய் பிரிவு அறிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண்ணின் மரணம்! சந்தேகநபரை காட்டிக்கொடுத்த ஏகல் | Tamil Leader | We Lead the Nation