Tamil Leader News
முக்கியம்
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●
செய்திகள்

மியன்மார் பொதுமன்னிப்பு தினமன்று இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா?

T

The Leader Desk

ஏப்ரல் 18, 2021 • 10:46 AM

மியன்மார் பொதுமன்னிப்பு தினமன்று இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்படுவார்களா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மியன்மாரின் இலங்கைக்கான தூதரகத்தினூடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் கடற்றொழில் நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரன தெரிவித்துள்ளார்.
  • மியன்மாரில் ஏப்ரல் 17 ஆம் திகதி பொதுமன்னிப்பு தினமாகும்.
  • இதற்கமைய, கடந்த மூன்று வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 இலங்கை மீனவர்களை விடுவிக்குமாறு அரசாங்கம், மியன்மார் அரசிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது.
  • இதனடிப்படையில், குறித்த மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் நாளைய தினம் (19) உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கும் எனவும் கடற்றொழில் அமைச்சின் கடற்றொழில் நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரன தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

மியன்மாரின் இலங்கைக்கான தூதரகத்தினூடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் கடற்றொழில் நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரன தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் ஏப்ரல் 17 ஆம் திகதி பொதுமன்னிப்பு தினமாகும்.

இதற்கமைய, கடந்த மூன்று வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 இலங்கை மீனவர்களை விடுவிக்குமாறு அரசாங்கம், மியன்மார் அரசிடம் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தது.

இதனடிப்படையில், குறித்த மீனவர்களை விடுவிப்பது தொடர்பில் நாளைய தினம் (19) உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கும் எனவும் கடற்றொழில் அமைச்சின் கடற்றொழில் நடவடிக்கை பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரன தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மீனவர்களின் விடுதலை குறித்து கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நாம் வினவியபோது, விடுதலை செய்யப்படும் மீனவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக கூறினார்.

அத்துடன், மீனவர்களின் 2 படகுகளையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...