Tamil Leader News
முக்கியம்
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●
செய்திகள்

சுமந்திரனின் கருத்தால் கூட்டமைப்புக்கு சிறிது சிறிதாக மக்கள் ஆணையை இழந்து செல்கிறது! கே.வி.தவராசா

T

The Leader Desk

ஏப்ரல் 18, 2021 • 6:26 AM

சுமந்திரனின் கருத்தால் கூட்டமைப்புக்கு சிறிது சிறிதாக மக்கள் ஆணையை இழந்து செல்கிறது! கே.வி.தவராசா

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இன்னும் சரியான முறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதவி நிலைகள் உரியவர்களுக்கு அளிக்கப்படாத இடைவெளியில், கட்சியின் இருப்பைச் சிதைக்கும் பல்வேறு கருத்தாடல்கள் இடம் பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • இன்னும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஓர் ஊடகப் பேச்சாளர் நியமிக்கப்படவில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.
  • சுமந்திரன் தன்னைக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் போன்று பிரதிபலித்தபடி தொடர்ந்தும் சர்ச்சையான கருத்துக்களை பொது வெளியில் தெரிவித்து வருவது கட்சியின் அரசியல் இருப்பிற்கும் உறுதிப்பாட்டிற்கும் சவாலாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆணையைப் பெற்றுத் தமிழர்களின் தலைமைத்துவத்தைச் சுமந்து திறம்பட வழிநடத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறிது சிறிதாக மக்கள் ஆணையை இழந்து செல்லும் சூழ்நிலையில், அதற்கான காரணங்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இன்னும் சரியான முறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதவி நிலைகள் உரியவர்களுக்கு அளிக்கப்படாத இடைவெளியில், கட்சியின் இருப்பைச் சிதைக்கும் பல்வேறு கருத்தாடல்கள் இடம் பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு ஓர் ஊடகப் பேச்சாளர் நியமிக்கப்படவில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தன்னைக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் போன்று பிரதிபலித்தபடி தொடர்ந்தும் சர்ச்சையான கருத்துக்களை பொது வெளியில் தெரிவித்து வருவது கட்சியின் அரசியல் இருப்பிற்கும் உறுதிப்பாட்டிற்கும் சவாலாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பசில் ராஜபக்ஸவிற்கு ஆதரவளிப்பதான தொனியில் கருத்து வெளியிட்டமை முதல் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள் கூட்டமைப்பின் வாக்கு வங்கியை தொடர்ந்தும் சிதைப்பது மட்டுமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பை இல்லாதொழிக்கும் பாரிய பணியைச் செய்யும் செயற்பாடு என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி தவராசா தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...