Tamil Leader News
முக்கியம்
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●
செய்திகள்

சிங்கள மக்களின் கடும் எதிர்ப்புக்கு முகங்கொடுத்துள்ள அரசாங்கம் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காகவே வடக்கில் கைது நடவடிக்கைகள்! சார்ள்ஸ் நிர்மலநாதன்

T

The Leader Desk

ஏப்ரல் 17, 2021 • 4:06 PM

சிங்கள மக்களின் கடும் எதிர்ப்புக்கு முகங்கொடுத்துள்ள அரசாங்கம் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காகவே வடக்கில் கைது நடவடிக்கைகள்! சார்ள்ஸ் நிர்மலநாதன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வடக்கில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் குறித்து கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  • இலங்கையின் முக்கிய ஸ்தானங்களை தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளுக்குத் தாரை வார்க்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதே முக்கிய காரணம் என அவர் கூறியுள்ளார்.
  • தற்போதைய கோட்டபாய ராஜபக்ஷவின் அரசாங்கம் சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறியபோதும் இப்போது, அந்த மக்களின் கடும் எதிர்ப்புக்கு முகங்கொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

வடக்கில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் குறித்து கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய கோட்டபாய ராஜபக்ஷவின் அரசாங்கம் சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சிபீடம் ஏறியபோதும் இப்போது, அந்த மக்களின் கடும் எதிர்ப்புக்கு முகங்கொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், சிங்கள மக்கள் அரசாங்கத்தை எதிர்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதுடன் பௌத்தத் துறவிகளும் முழுமையான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் முக்கிய ஸ்தானங்களை தற்போதைய அரசாங்கம் வெளிநாடுகளுக்குத் தாரை வார்க்கும் செயற்பாட்டில் ஈடுபடுவதே முக்கிய காரணம் என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், வடக்குக் கிழக்குப் பகுதியில் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளை மீள் உருவாக்குவதற்கு எத்தனிக்கின்றார்கள் என்றுகூறி இளைஞர், யுவதிகள் கைதுசெய்யப்படுகிறார்கள். இது, சிங்கள மக்களின் எதிர்ப்பைச் சமாளிப்பதற்கான திட்டமிடலே என சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் விடுதலைப் புலிகள் மீள உருவாகிறார்கள் எனவும், கோட்டாபய அரசாங்கத்தினால் மாத்திரமே புலிகளின் உருவாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் தென்னிலங்கை மக்களிடம் கோட்டாபய அரசாங்கம் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி, அரசாங்க எதிர்ப்பை இல்லாமல் செய்யவே இவ்வாறான கைதுகள் இடம்பெறுவதாக அவர் கூறியுள்ளார்.

எனவே, இவ்வாறான செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாக சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சிங்கள மக்களின் கடும் எதிர்ப்புக்கு முகங்கொடுத்துள்ள அரசாங்கம் எதிர்ப்புகளைச் சமாளிப்பதற்காகவே வடக்கில் கைது நடவடிக்கைகள்! சார்ள்ஸ் நிர்மலநாதன் | Tamil Leader | We Lead the Nation