Tamil Leader News
முக்கியம்
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●
செய்திகள்

'கோதபாய என்னை மோசமான மொழியில் திட்டுகிறார்'! விஜேயதாச (வீடியோ)

T

The Leader Desk

ஏப்ரல் 16, 2021 • 10:35 AM

'கோதபாய என்னை மோசமான மொழியில் திட்டுகிறார்'! விஜேயதாச (வீடியோ)

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று காலை தனது இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் நான் பேசிக் கொண்டிருந்தபோது அவர் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.
  • இதனைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபரிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளதாகவும், எனது குடும்பத்தினர் இதனால் அஞ்சுவதாகவும் கூறினார்.
  • எவ்வாறாயினும், ஜனாதிபதி தான் எதிர்பார்த்த அளவைக் கடந்து எதிர்பாராத விதத்தில் தன்னுடன் உரையாடியதாக கூறிய அவர் ஒரு நாட்டின் ஜனாதிபதி இந்த விதத்தில் நடந்து கொண்டால், எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எனக்கு சந்தேகமாக உள்ளது.
எழுத்து அளவு:

இன்று காலை தனது இல்லத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் நான் பேசிக் கொண்டிருந்தபோது அவர் இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு எடுத்ததாகவும், அவருக்கு அரசியல் அறிவு இல்லாததால், நேற்றைய ஊடக சந்திப்பு பற்றி ஜனாதிபதி மரியாதைக்கு புறம்பாக பேசியதாகவும் தான் அவருக்கு மிகுந்த மரியாதையுடன் பதிலளித்ததாகவும், விவாதிக்கப்பட்ட பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்ள தன்னைத் தொடர்புகொள்வார் என்று நினைத்ததாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி தான் எதிர்பார்த்த அளவைக் கடந்து எதிர்பாராத விதத்தில் தன்னுடன் உரையாடியதாக கூறிய அவர் ஒரு நாட்டின் ஜனாதிபதி இந்த விதத்தில் நடந்து கொண்டால், எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என எனக்கு சந்தேகமாக உள்ளது.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபரிடம் இது தொடர்பாக  புகார் அளித்துள்ளதாகவும், எனது குடும்பத்தினர் இதனால் அஞ்சுவதாகவும் கூறினார்.

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக நேற்று நாரஹேன்பிட்ட அபயராமயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ ராஜபக்ஷர்களைக் கடுமையாக விமர்சித்தார்.அங்கு பசில் ராஜபக்ஷ கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

ஊடகவியலாளர் சந்திப்பைத் தொடர்ந்து, ஜனாதிபதி நேற்று (15) மாலை முருத்தெட்டுவே ஆனந்த தேரரை தொலைபேசியில் தொடர்புகொண்டு விஜேதாச ராஜபக்ஷவை குற்றம் சாட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

'கோதபாய என்னை மோசமான மொழியில் திட்டுகிறார்'! விஜேயதாச (வீடியோ) | Tamil Leader | We Lead the Nation