Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

ரஷ்யா மீது தடை விதிக்க தயாராகும் அமெரிக்கா!

T

The Leader Desk

ஏப்ரல் 15, 2021 • 11:19 AM

ரஷ்யா மீது தடை விதிக்க தயாராகும் அமெரிக்கா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வியாழக்கிழமை இந்த நடவடிக்கை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த நடவடிக்கையை 30 ரஷ்ய நிறுவனங்கள் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
  • அதோடு 10 தனி நபர்கள், அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.
  • சோலார் விண்ட்ஸ் சைபர் தாக்குதல் கடந்த ஆண்டு, சோலார் விண்ட்ஸ் என்கிற மென்பொருளில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள்.
எழுத்து அளவு:

வியாழக்கிழமை இந்த நடவடிக்கை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையை 30 ரஷ்ய நிறுவனங்கள் இலக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அதோடு 10 தனி நபர்கள், அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.

ராஜரீக ரீதியிலான அதிகாரிகள் இந்த பட்டியலில் இலக்கு வைக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அமெரிக்க நிதி நிறுவனங்கள் ரஷ்யாவின் கரன்சியான ருபலில் வெளியாகும் கடன் பத்திரங்களை வரும் ஜூன் மாதத்திலிருந்து வாங்க, அதிபரின் செயல் ஆணை மூலம் தடை விதிக்க இருப்பதாகவும் பிபிசியின் கூட்டாளி சிபிஎஸ் நியூஸிடம் கூறப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

ஜோ பைடன்

ஜோ பைடன்

ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உறவு முறை பதற்றமாக இருக்கும் இந்த நேரத்தில், இந்த தடைகள் விதிக்கப்பட உள்ளன.

அமெரிக்கா தன் தேச நலனைப் பாதுகாக்கும் விஷயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என, கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனான தொலைபேசி உரையாடலின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.

இரு நாடுகளும் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பிருக்கும் விஷயங்களைக் குறித்து விவாதிக்க, அமெரிக்கா மற்றும் ரஷ்யா இல்லாமல் வேறு ஒரு நாட்டில், சந்தித்துப் பேச ஒரு திட்டத்தையும் ரஷ்ய அதிபர் புதினிடம் முன் மொழிந்து இருக்கிறார் அமெரிக்க அதிபர் பைடன்.

கடந்த மாதம் வெளியான ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு கொலைகாரர் என்று நினைக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, ஆம் என விடையளித்தார் ஜோ பைடன்.

செஞ்சதுக்கம், ரஷ்யா

சோலார் விண்ட்ஸ் சைபர் தாக்குதல்

கடந்த ஆண்டு, சோலார் விண்ட்ஸ் என்கிற மென்பொருளில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். இந்த தாக்குதலால் அமெரிக்காவில் உள்ள அரசு மற்றும் தனியார் என மொத்தம் சுமார் 18,000 கணிணிகளை சைபர் குற்றவாளிகளால் இயக்க வழி வகுத்தது.

உளவுத் துறையினரோ இந்த தாக்குதலுக்குப் பின் ரஷ்யா இருப்பதாக நம்புகிறார்கள். இந்த சைபர் தாக்குதலால் ஹேக்கர்கள் அமெரிக்காவின் கருவூலம், நீதித் துறை, உள் துறை உட்பட பல அரசு முகமைகளின் பல டிஜிட்டல் விவரங்களை அணுகுவதற்கான அனுமதியைப் பெற்றனர்.

"சோலார் விண்ட்ஸ் தாக்குதல் தான் உலகம் இதுவரை கண்ட மிகப் பெரிய மற்றும் அதிநவீன சைபர் தாக்குதல்" என மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித் கடந்த பிப்ரவரி மாதம் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.

கடந்த மாதம் வெளியான அறிக்கையில், டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறை அமெரிக்க அதிபராக வெற்றி பெற ரஷ்ய அதிபர் நடவடிக்கைகளை எடுத்ததாக அமெரிக்க உளவுத் துறை முகமைகள் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றன.

யுக்ரேன் விவகாரத்தில் ரஷ்யா கடுமையாகவும், தீவிரமாகவும் நடந்து கொள்வதை எதிர்த்து, அமெரிக்கா பொது வெளியில் எச்சரித்திருக்கிறது. யுக்ரேனின் கிழக்கு எல்லைப் பகுதியில், ரஷ்யா தொடர்ந்து ராணுவ நடமாட்டத்தை அதிகரித்து வருவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

"அமெரிக்காவின் இந்த விரோதப் போக்கு மற்றும் கணிக்க முடியாத செயல்பாடுகள் தான், எப்போதும் மோசமான சூழல்களை எதிர்கொள்ள எங்களைக் கட்டாயப்படுத்துகிறது" என க்ரெம்ளினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கொவ் கடந்த வாரம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறினார். மேலும், தாங்கள் அமெரிக்காவின் தடைகளை எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ரஷ்யா மீது தடை விதிக்க தயாராகும் அமெரிக்கா! | Tamil Leader | We Lead the Nation