Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

மணிவண்ணன் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பொய்யான தகவல்!

T

The Leader Desk

ஏப்ரல் 15, 2021 • 10:59 AM

மணிவண்ணன் விடுதலை தொடர்பில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பொய்யான தகவல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வடமாகாணசபை தேர்தலில் வி.மணிவண்ணன் பொதுவேட்பாளராக களமிறக்க சில தரப்புக்கள் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, அவர் வெளியிட்ட தகவலில் மணிவண்ணன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
  • அண்மையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதான அவரது விடுதலைக்கு டக்ளஸ் தேவானந்தா பின்னணியில் செயற்பட்டதாக கூறியது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் 2அவர் தெரிவித்தார்.
  • அதில் ரெமீடியசும் ஆஜராகினார், என்னை பிணையில் நீதிமன்றம் விடுவித்ததுதான் எனக்குத் தெரியும்.
எழுத்து அளவு:

வடமாகாணசபை தேர்தலில் வி.மணிவண்ணன் பொதுவேட்பாளராக களமிறக்க சில தரப்புக்கள் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து, அவர் வெளியிட்ட தகவலில்  மணிவண்ணன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதான அவரது விடுதலைக்கு டக்ளஸ் தேவானந்தா பின்னணியில் செயற்பட்டதாக கூறியது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் 2அவர்  தெரிவித்தார்.

அத்துடன் எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவாதா என்பது தொடர்பில் இன்னும் யோசிக்கவில்லை, யாழ் மாநகரசபையை திறம்பட நிர்வகிப்பதைப் பற்றியே இப்போதைக்கு சிந்திக்கிறோம் என்றும் மணிவன்னன் கூறினார்.

மாகாணசபை தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்கும் அதற்கு வாய்ப்பேயில்லையென்றுதான் நினைக்கிறேன் என மேலும் தெரிவித்தார்.

அண்மையில் பயஙகரவாத தடுப்பு பிரிவினரால் வி.மணிவண்ணன் கைதாகியிருந்தார். அவரது விடுதலைக்கு பின்னணியில் தாமே செயற்பட்டதாக ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, சட்டத்தரணி றெமீடியஸ், மாநகரசபை உறுப்பினர் ப.யோகேஸ்வரி ஆகியோர் கூறியிருந்தனர்.

இது பற்றி அவர் குறிப்பிடுகையில், என்னை பயங்கரவா தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பல சட்டத்தரணிகள் ஆஜராகினர். அதில் ரெமீடியசும் ஆஜராகினார், என்னை பிணையில் நீதிமன்றம் விடுவித்ததுதான் எனக்குத் தெரியும். பலர் கதைத்திருக்கிறார்கள்.

இதில் தானும் கதைத்ததென ஈ.பி.டி.பி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  சொல்கிறார். இதை நான் போய் ஆராய்ந்து பார்க்க வேண்டுமா? அதை எப்படி ஆராய்ந்து பார்க்க முடியும். உண்மையாக இவர் கதைத்தாரா என கோட்டாபயவிடம்தான் கேட்க வேண்டும் என்றும் மணிவண்ணன் குறிப்பிட்டார்.

நீங்கள் கதைக்கவில்லையென மறுப்பறிக்கை விட முடியுமா? நீங்கள் கதைத்துதான் வந்தேனென்றால், நான் இப்பொழுதே திரும்பி போகிறேன் என பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் திரும்பிச் செல்லட்டுமா? ஒன்றுமே செய்ய முடியாதே. என்னைப் பொறுத்தவரை ஒரு காதால் கேட்டு, மற்றைய காதால் விட்டுவிட்டு இருக்கிறேன் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை அப்படி என்றால் யாழ்மாநகர மேயர் மணிவண்ணன் விடுதலை தொடர்பில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொய்யான தகவலா என பலரும் கேள்வி எழுப்புவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...