Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

சுமந்திரன் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டனர்!

T

The Leader Desk

ஏப்ரல் 13, 2021 • 5:56 PM

சுமந்திரன் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டனர்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த வழக்கு தலைமை மாஜிஸ்திரேட் புத்த ஸ்ரீ ராகல முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
  • எவ்வாறாயினும், 11 சந்தேக நபர்கள் மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாகவும், மற்ற நான்கு சந்தேக நபர்கள் மீது எதிர்காலத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதவான் கூறினார்.
  • வத்தளையில் வைத்து துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் LTTE உறுப்பினரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கொழும்பு குற்றப்பிரிவு கணேமுல்ல சஞ்சீவ உள்ளிட்ட 15 பேரையும் கைது செய்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக தடுப்புக்காவலில் வைத்திருந்தது.
எழுத்து அளவு:

இந்த வழக்கு தலைமை மாஜிஸ்திரேட் புத்த ஸ்ரீ ராகல முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை படுகொலை செய்ய யுத்தத்தின் போது வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் புதைக்கப்பட்ட கிளைமோர் குண்டுகள் மற்றும் டி 56 துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை சட்டவிரோதமாக் கொண்டு வந்து கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளில் உள்ள பாதாள உலக கும்பல் உறுப்பினர்களுக்கு விற்றுள்ளதாகவும் அவர்கள் அவற்றை வாங்கியதாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

எவ்வாறாயினும், 11 சந்தேக நபர்கள் மீது வழக்குத் தொடர போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாகவும், மற்ற நான்கு சந்தேக நபர்கள் மீது எதிர்காலத்தில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதவான் கூறினார்.

வத்தளையில் வைத்து துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் LTTE உறுப்பினரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கொழும்பு குற்றப்பிரிவு கணேமுல்ல சஞ்சீவ உள்ளிட்ட 15 பேரையும் கைது செய்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக தடுப்புக்காவலில் வைத்திருந்தது.

கைது செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ மற்றொரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதன் நிமித்தம் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...