Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்: வாகனங்களுக்கு தீ வைப்பு, துப்பாக்கிச் சூடு, ஒரு மாவோயிஸ்ட் பலி!

T

The Leader Desk

ஏப்ரல் 11, 2021 • 5:49 PM

மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்: வாகனங்களுக்கு தீ வைப்பு, துப்பாக்கிச் சூடு, ஒரு மாவோயிஸ்ட் பலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாவோயிஸ்டுகளோடு நேருக்கு நேர் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் ஒரு மாவோயிஸ்டின் உடல் கைப்பற்றப்பட்டதாகவும் தந்தேவடா காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா தெரிவித்துள்ளார்.
  • இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அங்கு வந்த மாவோயிஸ்டுகள் வாகனங்களில் இருந்த தொழிலாளர்களை இறங்கச் சொல்லிவிட்டு தீவைத்தனர்.
  • அண்மையில் நடந்த ஒரு மாவோயிஸ்ட் தாக்குதலில் 22 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
  • மார்ச் 26ம் தேதி இந்த பிஜப்பூர் பகுதியில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் புத்தாராம் என்பவர் காஷ்யப் மாவோயிஸ்ட் என்று சந்தேகிக்கப்படுவோரால் கொல்லப்பட்டார்.
எழுத்து அளவு:

மாவோயிஸ்டுகளோடு நேருக்கு நேர் துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும் ஒரு மாவோயிஸ்டின் உடல்  கைப்பற்றப்பட்டதாகவும் தந்தேவடா காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவா தெரிவித்துள்ளார். அந்த இடத்தில் பல மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டிருக்க அல்லது காயப்பட்டிருக்கக்கூடும் என்றும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இன்னும் பல இடங்களில் நடவடிக்கை தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் பெயர் வாட்டி ஹியுங்கா என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், இவரைப் பிடிக்க 1 லட்சம் ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது பொலிஸ்

பிஜப்பூர் அருகே நடந்த தீவைப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அங்கே பொலிஸ் படைகள் விரைந்ததாக காவல் கண்காணிப்பாளர் காமலோசன் காஷ்யப் தெரிவித்தார். அந்த தண்ணீர் சுத்திகரிப்பு ஆலை கட்டுமாணப் பணியை நிறுத்தும்படி முன்கூட்டியே மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அங்கு வந்த மாவோயிஸ்டுகள் வாகனங்களில் இருந்த தொழிலாளர்களை இறங்கச் சொல்லிவிட்டு தீவைத்தனர். அத்துடன், எதிர்காலத்தில் அங்கே வேலை செய்யவேண்டாம் என்றும் அவர்கள் தொழிலாளர்களை எச்சரித்துச் சென்றனர்.

அண்மைக்காலமாக இந்தப் பிராந்தியத்தில் மாவோயிஸ்ட் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அண்மையில் நடந்த ஒரு மாவோயிஸ்ட் தாக்குதலில் 22 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

மார்ச் 26ம் தேதி இந்த பிஜப்பூர் பகுதியில் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் புத்தாராம் என்பவர் காஷ்யப் மாவோயிஸ்ட் என்று சந்தேகிக்கப்படுவோரால் கொல்லப்பட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...