Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

தொல்லியல் செயலணியில் ஏனைய சமூகத்தினரையும் இணையுங்கள்! முஷர்ரப் முதுநபீன்

T

The Leader Desk

ஏப்ரல் 11, 2021 • 11:18 AM

தொல்லியல் செயலணியில் ஏனைய சமூகத்தினரையும் இணையுங்கள்! முஷர்ரப் முதுநபீன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடறிந்த கல்விமானும் முன்னாள் கல்வி அதிகாரியுமான மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம்.
  • தொல்லியல் நிபுணர் ஒருவரின் கருத்துப்படி சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை முன்னாள் தலைவரும், தேசிய கல்வி நிருவாக பேரவை உறுப்பினருமான பேராசிரியர், கலாநிதி எம்.எஸ்.எம்.
எழுத்து அளவு:

நாடறிந்த கல்விமானும் முன்னாள் கல்வி அதிகாரியுமான மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் ஐ.எம்.எஸ்.எம். பழீல் மௌலானா அவர்களது கல்வி, சமூக, சமய, அரசியல் மற்றும் கலாசார பணிகளை புதிய தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் வகையில் சட்டத்தரணி றுடானி ஸாஹிர் அவர்களால் தொகுக்கப்பட்ட 'அபுல் கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மெளலானா வாழ்வும் பணியும் (1920-2013)' நூல் சனிக்கிழமை(10) மாலை(இரவு) மருதமுனை, பொது நூலக கேட்போர் கூடத்தில் பழீல் மௌலானா பவுண்டேஷனின் ஏற்பாட்டில் செனட்டர் மசூர் மௌலானா அரங்கில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதிதியாக கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில் கூறியதாவது

தொல்லியல் பிரச்சினை என்பது எம்மிடையே இருக்கின்ற மிக முக்கியமான பிரச்சினை. தொல்லியல் நிபுணர் ஒருவரின் கருத்துப்படி சிகிரியா பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட அரபு மட்பாண்ட எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மட்பாண்ட எச்சங்கள் அரபியினருடையதா? இது எந்த கலாச்சாரத்திற்குரியது என்பதை அறியாதவர்களாகத்தான் இங்கு பகுப்பாய்வு செய்கின்ற தொழிநுட்பவியலாளர்கள் இருக்கின்றார்கள்.எனவே தான் தொல்லியல் செயலணியில் ஏனைய சமூகத்தினரையும் இணைப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை முன்னாள் தலைவரும், தேசிய கல்வி நிருவாக பேரவை உறுப்பினருமான பேராசிரியர், கலாநிதி எம்.எஸ்.எம். அனஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். முஷர்ரப் முதுநபீன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா, கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் (நளிமி) உட்பட சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரிகள், பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், முக்கிய கல்விமான்கள், கலை, இலக்கிய ஜாம்பவான்கள், அபுல்கலாம் ஐ.எம்.எஸ்.எம்.பழீல் மெளலானாவின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...