Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

எனது கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் இராஜாங்க அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

T

The Leader Desk

ஏப்ரல் 10, 2021 • 8:46 AM

எனது கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் இராஜாங்க அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன் வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
  • அவர் மேலும் கூறுகையில், கடந்த 7 ஆம் திகதி நான் இந்த சபையில் ஆற்றிய உரை தொடர்பில் 8 ஆம் திகதி தனது கருத்தை முன்வைத்த இராஜாங்க அமைச்சரான செஹான் சேமசிங்க, என்னை உடனடியாக குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.
  • அப்படியானால் நாம் எதனை பேச முடியும், எதனைப் பேசக்கூடாது என்பது தொடர்பில் முன்னரே அறிவிக்க வேண்டும் என்றார்.
எழுத்து அளவு:

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன் வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 7 ஆம் திகதி நான் இந்த சபையில் ஆற்றிய உரை தொடர்பில் 8 ஆம் திகதி தனது கருத்தை முன்வைத்த இராஜாங்க அமைச்சரான செஹான் சேமசிங்க, என்னை உடனடியாக குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார். இது மக்களின் பிரதிநிதியான எனது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயலாகவுள்ளது.

இராஜாங்க அமைச்சரான செஹான் சேமசிங்க இப்பாராளுமன்றத்தை மூன்றாவது தடவையாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். அவர் முதலில் பாராளுமன்ற கலாசாரத்தை கற்றுக்கொள்ள வேண்டும். நான் கூறிய கருத்தொன்று தொடர்பில் அவர் குற்றப்புலனாய்வு பிரிவு என்னை விசாரணை செய்ய வேண்டும் என்று கூறி அச்சுறுத்தல் விடுகின்றார்.எனது உரை தொடர்பில் அவர் இங்கு தெரிவித்த கருத்துக்களை சபாநாயகர் ஹன்சாட்டை ப் பெற்று உறுதிப்படுத்தி அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . எனது கருத்துக்கள் தொடர்பில் பிழையான விடயங்களைக் காட்ட அவர் முயற்சிக்கின்றார். பாராளுமன்றத்தில் யாரும் இப்படிப்பேசக்கூடாது என கூற முற்படுகின்றார். அப்படியானால் நாம் எதனை பேச முடியும், எதனைப் பேசக்கூடாது என்பது தொடர்பில் முன்னரே அறிவிக்க வேண்டும் என்றார். இதன்போது எழுந்த எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. கூறுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபையில் தெரிவிக்கும் கருத்துக்கு எதிராக அவரை குற்றம் சாட்டவோ அச்சுறுத்தவோ முடியாது. அவர் தெரிவித்த கருத்துக்கள் தவறானவை என்றால் ,அவர் குற்றம் செய்திருந்தால் அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவந்து விவாதம் நடத்தியே நடவடிக்கை எடுக்க முடியும் என்றார். இது தொடர்பில் அரச தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறுகையில்,

உறுப்பினர் சாணக்கியன் பேசிய பேச்சை நானும் கேட்டுக்கொண்டிருந்தேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற இன்னொரு தாக்குதலுக்கு அரசு திட்டமிடுவதாகவே கூறியிருந்தார். அவர் அரசை குற்றம் சாட்டினார். எனவே இந்த சபையில் பேசும்போது நாகரிகமாகவும் உண்மையாகவும் பேச வேண்டும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எனது கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் இராஜாங்க அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! | Tamil Leader | We Lead the Nation