Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

மணல் மாஃபியா குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன்!

T

The Leader Desk

ஏப்ரல் 9, 2021 • 1:49 PM

மணல் மாஃபியா குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாதுகாப்பு ஆலோசனைக்குழுக் கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றிருந்தது.
  • அத்துடன், குறித்த விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியிருந்தார்.
  • இதன்போதே குறித்த விடயம் தொடர்பாக இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.
எழுத்து அளவு:

பாதுகாப்பு ஆலோசனைக்குழுக் கூட்டம் நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இதன்போதே குறித்த விடயம் தொடர்பாக இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.

வவுனியா மற்றும் அம்பாறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத மண் அகழ்வு குறித்தும் இரா.சாணக்கியன், ஜனாதிபதியின் கனவத்திற்கு கொண்டு சென்றிருந்தார்.

மேலும், இயற்கை வழங்கள் அழிக்கப்படுதல், இல்மனைற் மற்றும் கிரவல் அகழ்வு குறித்தும் அவர் இதன்போது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

அத்துடன், குறித்த விடயம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியிருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத மண் அகழ்வு குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்றிருந்தனர்.

இதன்போது சிலர் குறித்த இருவருக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டிருந்த நிலையில், அதுகுறித்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோருடன் இணைந்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனும் அடுத்த சில நாட்களில் குறித்த பகுதிக்கு சென்றிருந்தனர்.

இதன்போதும் குறித்த மூவரையும் அச்சுறுத்தும் வகையில் சிலர் செயற்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...