Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

யாழில் வீதிகளில் எச்சில் துப்பினால் இரண்டாயிரம் அபராதம்! யாழ்.மாநகர சபை முதல்வர் அறிவிப்பு

T

The Leader Desk

ஏப்ரல் 8, 2021 • 10:13 AM

யாழில் வீதிகளில் எச்சில் துப்பினால் இரண்டாயிரம் அபராதம்! யாழ்.மாநகர சபை முதல்வர் அறிவிப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • யாழ்.மாநகர சபையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
  • மேலும் கூறுகையில், யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சுகாதார நடைமுறைகள், வீதிப் போக்குவரத்து நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கு மாநகர காவல்படை எனும் பெயரில் 05உத்தியோகத்தர்களைக் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
  • அதுமட்டுமன்றி வீதிப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகள் மீதும் நடவடிக்கை எடுப்பார்கள்.
எழுத்து அளவு:

யாழ்.மாநகர சபையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கூறுகையில்,

யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சுகாதார நடைமுறைகள், வீதிப் போக்குவரத்து நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கு மாநகர காவல்படை எனும் பெயரில் 05உத்தியோகத்தர்களைக் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இவர்கள், யாழ் மாநகரின் தூய்மையை பாதுகாக்கும் வகையில் வீதிகளில் குப்பை போடுபவர்கள், வீதிகள், பொது இடங்களில் வெற்றிலை உமிழ்ந்துவிட்டு எச்சில் துப்புபவர்கள், தூய்மையை சரி வரப் பேணாதவர்கள் என அடையாளம் காணப்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி வீதிப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகள் மீதும் நடவடிக்கை எடுப்பார்கள். இதற்கு பொதுமக்கள் போதுமான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

மேலும் சுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் மீது தண்டப்பணம் அறவிடும் நடைமுறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் வீதி மற்றும் பொது இடங்களில் வெற்றிலை துப்பினால் 2000ரூபாவும், மீண்டும் தவறிழைத்தால் 4000ரூபா வரையும் தண்டம் அறவிடப்படும்.  வீதிகள் பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு 5000ரூபாவும் மீண்டும் செய்தால் 10,000ரூபா தண்டமும், அத்துடன் பொது இடங்களில் மலசலங்களைக் கழிப்பவர்களுக்கு 5000  ரூபாவும் மீண்டும் செய்தால் 10,000 ரூபாவும் தண்டமாக அறவிடப்படும்.

இந்த நடைமுறை இன்று முதல் செயற்படுத்தப்படும் எனவும் அதற்கு பொதுமக்கள், வர்த்தகர்கள் ஏற்றவகையில் ஒத்துழைப்பு  வழங்க வேண்டும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...