Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

திருமதி அழகியான புஷ்பிகா சந்தமாலியின் முறைப்பாட்டை அடுத்து திருமதி அழகி கரோலின் ஜூரி கைது!

T

The Leader Desk

ஏப்ரல் 8, 2021 • 9:46 AM

திருமதி அழகியான புஷ்பிகா சந்தமாலியின் முறைப்பாட்டை அடுத்து திருமதி அழகி கரோலின் ஜூரி கைது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
  • கிரீடத்தை தலையிலிருந்து பறித்தெடுத்த போது காயம் ஏற்பட்டதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • திருமதி அழகி போட்டியின் இறுதி நிகழ்வின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
எழுத்து அளவு:

மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

திருமதி அழகி போட்டியின் இறுதி நிகழ்வின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

புஷ்பிகா சந்தமாலி சில்வா என்பவரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டது.

திருமதி அழகியாக தாம் தெரிவாகி மகுடம் சூட்டப்பட்ட போது, அதனை பறித்தெடுத்து மற்றுமொருவருக்கு சூட்டப்பட்டதாக முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

கிரீடத்தை தலையிலிருந்து பறித்தெடுத்த போது காயம் ஏற்பட்டதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல பலாத்காரமான முறையில் தாம் நடத்தப்பட்டதாகவும் புஷ்பிகா சந்தமாலி சில்வா தமது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொண்ட கருவாத்தோட்டம் பொலிஸார், உலக திருமதி அழகியான இலங்கையின் கரோலின் ஜூரி மற்றும் சூலா பத்மேந்திரன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக சாட்சியங்களை சேகரிப்பதோடு கறுவாத்தோட்டம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...