Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

ஊடகவியலாளர் மலிக அபேகோன் கடத்தல் மற்றும் பொலிஸ் தாக்குதலுக்கு எதிராக போராட்டம்!

T

The Leader Desk

ஏப்ரல் 8, 2021 • 8:45 AM

ஊடகவியலாளர் மலிக அபேகோன் கடத்தல் மற்றும் பொலிஸ் தாக்குதலுக்கு எதிராக போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஏப்ரல் 7 கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு முன்னால் சுகாதார ஊழியர்கள் நடத்திய போராட்டத்தின் போது செய்தி சேகரிக்கச்சென்றமைக்காக சுதந்திர ஊடகவியலாளர் மலிக அபேகோ​ன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
  • தொழிற்சங்க ஆர்வலர்களும் மற்றும் வழக்கறிஞர் ஒருவரும் நேற்று இரவு மருதானை பொலிஸ் நிலையத்திற்குச் மலிகவை சந்திக்க சென்றிருந்தபோதிலும், அவரை சந்திக்க பொலிசார் அனுமதிக்கவில்லை.
  • கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய சுகாதாரத் தொழிலாளர் சங்கத்தால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எழுத்து அளவு:

ஏப்ரல் 7 கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு முன்னால் சுகாதார ஊழியர்கள் நடத்திய போராட்டத்தின் போது செய்தி சேகரிக்கச்சென்றமைக்காக சுதந்திர  ஊடகவியலாளர் மலிக அபேகோ​ன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

11 கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய சுகாதாரத் தொழிலாளர் சங்கத்தால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தற்போது மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலிக அபேகோன் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தும்  அதற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தொழிற்சங்க ஆர்வலர்களும் மற்றும் வழக்கறிஞர் ஒருவரும் நேற்று இரவு மருதானை பொலிஸ் நிலையத்திற்குச் மலிகவை சந்திக்க சென்றிருந்தபோதிலும், அவரை சந்திக்க பொலிசார் அனுமதிக்கவில்லை.

maradana police cruelty protest

maradana swc protest

இதேபோல், பொலிஸ் காவலில் உள்ள ஒரு நபரின் உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வழக்கறிஞரை அவ்வாறு சந்திக்க மருதானை பொலிஸ் OIC மறுத்துவிட்டார்.

தற்போதைய கோதபய ராஜபக்ஷ ஆட்சி தொழிலாளர்களின் உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தி ஜனநாயக உரிமைகளை புறக்கணிக்கும் அடக்குமுறை ஆட்சியை நோக்கி நகர்கிறது என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

காவல்துறையினர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துள்ளனர் மற்றும் பல சந்தர்ப்பங்களில் மக்களை நசுக்கி, அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், இந்த நிலைமையை உடனடியாக அம்பலப்படுத்தி அதற்கு எதிராக மக்கள் சக்தியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை போராட்டத்தில் பங்கு பற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...