Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

பிரதமர் வழங்கிய உறுதிமொழிகள் இதுவரை நிறைவேற்றப்படாததால் மட்டக்களப்பில் அரச வங்கி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

T

The Leader Desk

ஏப்ரல் 7, 2021 • 11:20 AM

பிரதமர் வழங்கிய உறுதிமொழிகள் இதுவரை நிறைவேற்றப்படாததால் மட்டக்களப்பில் அரச வங்கி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக ஒன்றுகூடிய இலங்கை வங்கி ஊழியர் சங்க ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் கவன யீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • அத்துடன் வங்கியின் பயிலுனர் ஊழியர்கள் கடந்த மூன்று வருடங்களை கடந்துள்ள போதிலும் இதுவரையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையெனவும் அவர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என பிரதமர் வழங்கிய உறுதிமொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லையெனவும் இதன்போது தெரிவித்தனர்.
  • வங்கி ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது தொடர்பில் பிரதமர் வழங்கிய உறுதிமொழி எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லையெனவும் வங்கி உத்தியோகத்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:

மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக ஒன்றுகூடிய இலங்கை வங்கி ஊழியர் சங்க ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் கவன யீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கி ஊழியர்களுக்கான ஓய்வூதியம் வழங்குவது தொடர்பில் பிரதமர் வழங்கிய உறுதிமொழி எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லையெனவும் வங்கி உத்தியோகத்தர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் வங்கியின் பயிலுனர் ஊழியர்கள் கடந்த மூன்று வருடங்களை கடந்துள்ள போதிலும் இதுவரையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லையெனவும் அவர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என பிரதமர் வழங்கிய உறுதிமொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லையெனவும் இதன்போது தெரிவித்தனர்.

ஐந்து வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் அவரது செயலாளருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் நிலையில்,அரச வங்கிகளில் கடமையாற்றுவோருக்கு ஓய்வூதியம் இல்லாத நிலையுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தெரிவித்தார்.

எந்தவொரு அரச பதவிக்கும் இரண்டு வருடத்திற்கு மேல் பயிற்சிக்காலம் இல்லாதபோது இலங்கை வங்கியில் இறுதியாக இணைத்துக்கொள்ளப்பட்ட வங்கி பயிற்சி ஊழியர்களுக்கு மூன்று வருடமாக்கப்பட்டுள்ளதாகவும் இது ஊழிய வளச்சுரண்டல் எனவும் தனியார் வங்கியை விட அரசாங்கம் மோசமான முறையில் நடந்துகொள்வதாகவும் இதன்போது குற்றஞ்சாட்டப்பட்டது.

மேர்சன்ட் வங்கியில் பண சுரண்டல்,கையாடல்கள் நடைபெற்றுள்ளதாகவும் இவ்வாறு பல விடயங்களை எதிர்த்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்ததாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பிரதமர் வழங்கிய உறுதிமொழிகள் இதுவரை நிறைவேற்றப்படாததால் மட்டக்களப்பில் அரச வங்கி உத்தியோகத்தர்கள் போராட்டம்! | Tamil Leader | We Lead the Nation