Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்புரிமை பற்றிய தீர்ப்பு இன்று!

T

The Leader Desk

ஏப்ரல் 5, 2021 • 5:26 AM

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்புரிமை பற்றிய தீர்ப்பு இன்று!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் 12 ம் திகதியுடன் மூன்று மாதம் முடிவடைகின்றது.
  • ரிட் மனு தொடர்பான மனுவிற்கு 31 ஆம் திகதி தீர்ப்பளிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அது தயாரிக்கப்படவில்லை என்பதால், நீதிபதிகள் அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயதுன்னே கொரயா ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய குழு இந்த வழக்கை இன்று வரை ஒத்திவைத்தது.
  • சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரம் ஒரு நாள் நாடாளுமன்ற அமர்விலேனும் கலந்து கொள்ளத்தவறினால் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கக்கு ஜனவரி 12 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
எழுத்து அளவு:

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் 12 ம் திகதியுடன் மூன்று மாதம் முடிவடைகின்றது.

ரிட் மனு தொடர்பான மனுவிற்கு 31 ஆம் திகதி தீர்ப்பளிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அது தயாரிக்கப்படவில்லை என்பதால், நீதிபதிகள் அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயதுன்னே கொரயா ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய குழு  இந்த வழக்கை இன்று வரை ஒத்திவைத்தது.

ரஞ்சன் ராமநாயக்க தனது நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்வதை எதிர்த்து இந்த ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கனவு கலையுமா?

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அடுத்த வாரம் ஒரு நாள் நாடாளுமன்ற அமர்விலேனும் கலந்து கொள்ளத்தவறினால் அவரது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

நாடாளுமன்றத்தின் எந்தவொரு உறுப்பினரும் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு மேல் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளாவிட்டால் தானாகவே தனது இடத்தை இழக்க நேரிடும் என்பதை நாடாளுமன்றத்தின் நிலையியற் சட்டம் தெளிவுபடுத்துகின்றது என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ரஞ்சன் ராமநாயக்கக்கு ஜனவரி 12 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

அதன்படி ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் 12 ம் திகதியுடன் மூன்று மாதம் முடிவடைகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ரஞ்சனின் நாடாளுமன்ற உறுப்புரிமை பற்றிய தீர்ப்பு இன்று! | Tamil Leader | We Lead the Nation