Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

காணாமல்போனோர் ​தொடர்பாக விசாரணை செய்யும் அலுவலகத்தை இரத்து செய்ய நேரிடும்! கெஹெலிய

T

The Leader Desk

ஏப்ரல் 4, 2021 • 9:11 AM

 காணாமல்போனோர் ​தொடர்பாக விசாரணை செய்யும் அலுவலகத்தை இரத்து செய்ய நேரிடும்! கெஹெலிய 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • ஜனநாயக சமூகத்தில் தொடர்ந்தும் காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் இருக்குமென தெரிவிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
  • இதன்போது, காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அலுவலகம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், காணாமல்போனோர் ​தொடர்பாக விசாரணை செய்யும் அலுவலகத்தை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்ல முடியாது எனவும் அதனை இரத்து செய்ய நேரிடும் எனவும் கூறினார்.
எழுத்து அளவு:

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அலுவலகம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், காணாமல்போனோர் ​தொடர்பாக விசாரணை செய்யும் அலுவலகத்தை நீண்டகாலத்திற்கு கொண்டு செல்ல முடியாது எனவும் அதனை இரத்து செய்ய நேரிடும் எனவும் கூறினார்.

கடந்த காலத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே இந்த அலுவலகத்தை தாம் நியமித்ததாக அவர் தெரிவித்தார்.

ஜனநாயக சமூகத்தில் தொடர்ந்தும் காணாமலாக்கப்பட்ட சம்பவங்கள் இருக்குமென தெரிவிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் அன்று இடம்பெற்ற விடயங்கள் முற்றிலும் மாறுபட்டவையென்றும் யுத்தகாலப் பகுதியென்பதால் நாளை என்பதே நம்பிக்கையற்ற நிலைமையாக அன்று இருந்ததாகவும் மக்கள் காணமாலாக்கப்பட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப்புலிகளால் முன்னெடுக்கப்பட்ட விடயதானங்கள் பல இருந்தனவென்றும் அது நாட்டில் தொடருமாக இருந்தால் இதனை ஜனநாயக நாடென கூற முடியாதென்றும் தெரிவித்தார்.

எப்போதும் காணாமல்போனவர்கள் தொடர்வார்களாக இருந்தால் அதற்கு ஆணைக்குழுக்கள் அவசியம் என்றால் நாட்டில் வேறு பிரச்சினைகள் இருப்பதாகவே தோற்றப்பாடு வெளிப்படும் என்றும் ஆனால், அது அந்தப் பிரச்சினைக்கு மாத்திரமானதாகவே இருக்க வேண்டுமென தான் நினைப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...