Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாட்டின் சட்டம் செல்லுபடியாகாது!

T

The Leader Desk

ஏப்ரல் 4, 2021 • 4:29 AM

கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாட்டின் சட்டம் செல்லுபடியாகாது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கையின் நிலப்பகுதிக்கு வெளியே 446.6 ஹெக்டயார் கொண்ட விசேட பொருளாதார வலயம் என்ற வகையில் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
  • இந்த விசேட அதிகாரங்களைக் கொண்ட ஆணைக்குழு குறுகிய காலத்திற்குள் வர்த்தமானியின் ஊடாக நியமிக்கப்படுமெனவும், 20வது அரசியல் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள உயர் பதவிகளுக்கு நியமிக்கும் அதிகாரத்தின்படி அதன் தலைவர் நியமிக்கப்படுவாரெனவும் தெரிய வருகிறது.
  • இதற்கிடையே இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள தொழில் உரிமைகள் சட்டமூலம் உட்பட பல சட்டங்கள் துறைமுக நகரத்திற்குள் செல்லுபடியாகாதெனவும் தெரிய வருகிறது.
எழுத்து அளவு:

இலங்கையின் நிலப்பகுதிக்கு வெளியே 446.6 ஹெக்டயார் கொண்ட விசேட பொருளாதார வலயம் என்ற வகையில் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. துறைமுக நகரின் முதலீட்டு வாய்ப்புகளை வெளிப்படுத்தல், முதலீட்டாளர்களை பதிவு செய்தல், விசேட பொருளாதார வலயங்களில் திட்டங்களை அங்கீகரித்தல் மற்றும் வர்த்தக மோதல்களை தீர்த்தல் ஆகிய அனைத்தும் இந்த ஆணைக்குழுவின் ஆதிக்கத்திற்கு உட்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விசேட அதிகாரங்களைக் கொண்ட ஆணைக்குழு குறுகிய காலத்திற்குள் வர்த்தமானியின் ஊடாக நியமிக்கப்படுமெனவும், 20வது அரசியல் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள உயர் பதவிகளுக்கு நியமிக்கும் அதிகாரத்தின்படி அதன் தலைவர் நியமிக்கப்படுவாரெனவும் தெரிய வருகிறது.

எவ்வாறாயினும், மேற்படி விசேட பொருளாதார வலயமும், அதன் நிர்வாக அதிகாரமும் அமுலுக்கு வந்து ஒரு வருடத்திற்கு பின்னர் இந்த துறைமுக நகரில் முதலீடு செய்வதற்காக இந்நாட்டுக்கு வரும் வியாபாரிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதற்கிடையே இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள தொழில் உரிமைகள் சட்டமூலம் உட்பட பல சட்டங்கள் துறைமுக நகரத்திற்குள் செல்லுபடியாகாதெனவும் தெரிய வருகிறது.

இதன் காரணமாக கொழும்பு துறைமுக நகரம் என்பது இந்நாட்டின் சட்டத்திற்கு வெளியில், வர்த்தக அபிலாஷைகளுக்காக சட்டங்களைப் பொருட்படுத்தாது நடாத்திச் செல்லப்படும் வியாபாரக் குகையாக ஆகிவிடும். இது சம்பந்தமாக வெளிப் பகட்டுகளும் பல்வேறு திட்டங்களும் வெளிவந்த போதிலும், துறைமுக நகரின் உண்மை நிலையான இந்நாட்டு மக்களின் வாழ்விற்கோ, சமூகப் பொருளாதார இருப்பிற்கோ எந்தத் தொடர்பும் இல்லாத, பண முதலைகளின் போட்டிக்கான இடமாக ஆகிவிடும்.

இது சம்பந்தமான முழுமையான தகவல்களை துறைமுகநகரின் இணையத் தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கொழும்பு துறைமுக நகரத்திற்கு நாட்டின் சட்டம் செல்லுபடியாகாது! | Tamil Leader | We Lead the Nation