Tamil Leader News
முக்கியம்
527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●மெல்பர்ன் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராகப் பொறுப்பேற்ற சஷிகலா சிறிவர்தன!●நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து பகிரங்கப்படுத்தல்!●செம்மணி மனிதப் புதைகுழி விசாரணைகளுக்குச் சர்வதேச உதவியைக் கோருகிறது HRCSL!●புதிய குற்றவியல் சட்டமூலம் சித்திரவதைக்கு வழிவகுக்கும்!●'மக்ஸ் அப்' உள்ளிட்ட 27 நிறுவனங்களுக்கு மத்திய வங்கி தடை!●மரணத்தின் மர்மத்தைத் தேடும் அறிவியல் விசாரணை!●விடுதிப் பணிப்பெண்ணுக்குத் துன்புறுத்தல் குற்றச்சாட்டு: இந்திய நீச்சல் சாம்பியனுக்கு வாழ்நாள் தடை ஆபத்து!●செம்மணி அறிக்கையின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் எதிர்ப்பு!●ஆசிய-பசிபிக் சுகாதார மாநாட்டில் இலங்கைக்குப் பிரதித் தலைவர் பதவி!●
செய்திகள்

நுவரெலியா வெலிமட பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி!

T

The Leader Desk

ஏப்ரல் 1, 2021 • 9:40 AM

நுவரெலியா வெலிமட பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் மூவர் பலி!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எல்ல பகுதியிலிருந்து நுவரெலியாவிற்கு சென்று, மீளவும் எல்ல பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்த ஆட்டோ, எதிர் திசையில் வந்த கனரக லொரியொன்றுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
  • இவ்விபத்தில் 51,52,20 வயதுகளுடைய மூன்று பெண்களே பலியானவர்களாவார்.
  • ஆட்டோவில் பயணித்தவர்களே பலியானவர்களாவர்.
எழுத்து அளவு:

எல்ல பகுதியிலிருந்து நுவரெலியாவிற்கு சென்று, மீளவும் எல்ல பகுதிக்கு திரும்பிக்கொண்டிருந்த ஆட்டோ, எதிர் திசையில் வந்த கனரக லொரியொன்றுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் 51,52,20 வயதுகளுடைய மூன்று பெண்களே பலியானவர்களாவார். விபத்தில் காயமடைந்த நபரொருவர் நுவரெலியா அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டோவில் பயணித்தவர்களே பலியானவர்களாவர். இவ் ஆட்டோவில் வந்த மற்றவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

வெலிமடை பொலிசார் மேற்படி விபத்துக்குறித்து தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் விபத்துக்கான கனரக லொரியின் சாரதியையும் வெலிமடை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...